1 மாதத்தில் எடியூரப்பா சிஎம் ஆகாவிட்டால், தொழிலையே விட்டு விடுகிறோம்- கர்நாடக ஜோதிடர்கள் செம சேலஞ்ச்
Recommended Video

பெங்களூர்: இன்னும் ஒரு மாதம்தான்.. ஒருவேளை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா மீண்டும் முதல்வராகாவிட்டால், இரு பிரபல ஜோதிடர்கள் தங்கள் தொழிலையே விட்டுவிட்டு போய்விடுவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாகவே ஆட்சிக்கு எதிராக சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலகம் செய்து வருகிறார்கள்.
இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைமைக்கு, பாஜகதான் காரணம் என்று ஆளும் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

பிரபல ஜோதிடர்கள்
இந்த நிலையில்தான், கர்நாடகாவை சேர்ந்த வித்வான் கணேஷ் ஹெக்டே மற்றும் பவன் ஜோஷி ஆகிய இரு பிரபல ஜோதிடர்கள், எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதல்வராக பதவியேற்பார் என கணித்துள்ளனர். அதுவும், மார்ச் 5ம் தேதிக்குள். அதாவது சரியாக இன்னும் ஒரு மாதத்திற்குள், எடியூரப்பா முதல்வராக பதவியேற்கும் சூழ்நிலை நிலவுகிறதாம்.

குமாரசாமி முதல்வர் பதவி
ஜோதிடர்கள் இருவருமே தங்கள் கணிப்பு மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர். கோள்கள் அதற்கு ஏற்ப சுற்றி வருவதாகவும், குமாரசாமிக்கு நேரமே சரியில்லை என்றும் கோரசாகவே இவர்கள் கூறுகிறார்கள். என்னதான், யாகம், ஹோமம் செய்தாலும், குமாரசாமி பதவிக்கு ஆபத்து என்கிறார்கள் இவர்கள்.

மார்ச் 5ம் தேதி
ஒருவேளை எடியூரப்பா மார்ச் 5ம் தேதிக்குள் முதல்வராகாவிட்டால் அதன்பிறகு இந்த தொழிலில் தாங்கள் இருக்கப்போவதில்லை எனவும் அறிவித்து விறுவிறுப்பை ஏற்றியுள்ளனர், இவ்விரு பிரபல ஜோதிடர்களும். அதேநேரம், எடியூரப்பா முதல்வரானாலும் அவரது பதவிக்காலம் வரும் அக்டோபர் வரை அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

2019 லோக்சபா தேர்தலில் வெல்லப்போவது யார்
கர்நாடகாவில் இப்படி என்றால், மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக, மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான் நாட்டில் அமையும் என்கிறார்கள் ஜோதிடர்கள். மார்ச் மாதத்திற்கு பிறகு மோடியின் புகழ் இன்னும் அதிகமடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாம். எனவே, லோக்சபா தேர்தலில் பாஜக 285 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என இவர்கள் கணித்துள்ளனர். இன்னும் ஒரு மாதம்தானே.. பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications