ராஜீவ் காந்திக்கு நடந்தது தெரியுமா? டிகே சிவக்குமார் கிட்ட வந்த நபர்.. கையை பிடித்து வளைத்து- வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் பொது இடத்தில் கோபமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் 58 வயது நிரம்பியவர். கட்சியின் வலுவான தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர் அடிக்கடி கோபம் அடையும் குணம் கொண்டவர்.
பொது இடங்களில் பல முறை கோபம் அடைந்து, அது வீடியோவாக வெளியாகி சர்ச்சையில் இவர் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் அவரின் இன்னொரு வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

டிகே சிவக்குமார்
மாண்டியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் சிவக்குமார் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவருக்கு பின் பக்கம் தொண்டர்கள் பலர் கூட்டமாக வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென எங்கிருந்தோ வந்த வெள்ளை சட்டை, ஜீன்ஸ் அணிந்த நபர், டிகே சிவக்குமாரை மோதுவது போல கூட்டத்திற்குள் நுழைந்தார்.

செல்போன் செல்பி
அவர் உள்ளே வந்ததும் டிகே சிவகுமாரை நோக்கி கையை நீட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில்தான் அவர் செல்போனை வைத்து செல்பி எடுக்க முயன்றது தெரியவந்தது. இதை பார்த்ததும் கோபம் அடைந்த டிகே சிவக்குமார்.. அந்த நபரின் கையை பிடித்து வளைத்து.. அப்படியே அந்த போனை பிடுங்கி.. கோபமாக சிவக்குமார் கத்தினார்.

ராஜீவ் காந்தி சிவக்குமார்
ராஜீவ் காந்திக்கு நடந்தது நினைவு இருக்கா என்று கோபமாக அந்த இளைஞரிடம் சிவக்குமார் கேட்டார். இதையடுத்து தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், அவரின் கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் நினைவு இருக்கலாம். நான் செய்ததில் எந்த தவறும் இல்லை.

டிகே சிவக்குமார் விளக்கம்
கோபம், உணர்ச்சிகள் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதெல்லாம் மனித உணர்வு. இதில் தவறு இல்லை என்று தான் செய்த காரியத்திற்கு டிகே சிவக்குமார் விளக்கம் அளித்தார். இருப்பினும் இளைஞர் ஒருவரின் போனை வெடுக்கென டிகே சிவக்குமார் பிடுங்கியது தவறு என்று பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

வைரல் வீடியோ
இந்த வீடியோவை ஷேர் செய்து பலரும் டிகே சிவக்குமாரை விமர்சனம் செய்து வருகின்றன. இது தவறு என்று கூறி பலர் விமர்சனம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் டிகே சிவக்குமார் இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications