பிக் பாஸ் 5: பெரியண்ணன் மாதிரி பந்தா செய்த அபிஷேக்.. சவுண்ட் விட்ட பிரியங்கா.. ஆரம்பமே சரவெடி
சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் 5 சீசன் விஜய் டிவியில் ஆரம்பித்துள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெயர், புகைப்படம் போன்றவை நேற்று வெளியிடப்பட்ட நிலையில் மாலையில் அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பியது.
வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் தனக்கே உரித்தான பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்ய முன்பாகவும் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் பேசுவது வாடிக்கை. இந்த சீசனிலும் அதை தவறாமல் செய்வதார். ஐந்து சீசன்கள் ஆனபோதிலும் கமல்ஹாசனிடம் சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்தனர் சமூகவலைத்தள வாசிகள்.

அறியப்படாத பெயர்கள்
பிக் பாஸ் 5 சீசன் போட்டியாளர்கள் பெயர்களை ஒவ்வொன்றாக கமல்ஹாசன் வெளியிடும்போது ஆரம்பத்தில் அறிமுகமான பலரும் வெகுஜன மக்களால் அதிகம் அறியப்படாதவர்களாக இருந்தனர். கணிசமான சிலருக்கு மட்டுமே அறிமுகமாகி பலருக்கும் அறிமுகம் ஆகாதவர்கள் அவர்கள். இதில் ராஜூ ஜெயமோகன் மட்டும் சற்று விதிவிலக்கு. எழுத்தாளர் மட்டும் கிடையாது விஜய் டிவி சீரியல்கள் சிலவற்றில் அவர் நடித்துள்ளதால் மற்ற போட்டியாளர்களை விட சற்று அதிகம் பேருக்கு தெரிந்த முகமாக இருந்தது.

அறிமுகமான முகங்கள்
பிற்பாதியில்தான் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, பாடகி சின்ன பொண்ணு, நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய இமாம் அண்ணாச்சி ஆகியோர் வெகுஜன மக்களுக்கு தெரியும் முகங்களாக இருந்தனர். முதல் போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டவர் இசைவாணி. பின்னர் ராஜ் ஜெயமோகன், விமர்சகர் அபிஷேக், திருநங்கை மற்றும் மாடல் நமிதா மாரிமுத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரிசையாக சென்றனர்.

காமெடி செய்த ராஜு ஜெயமோகன்
இதில் ராஜு ஜெயமோகன் ஆரம்பம் முதல் நகைச்சுவையாக பேசுவதற்கு முயற்சி செய்தார். அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. ஆனால் போட்டியாளர் அபிஷேக், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு அந்த நிலைமை சற்று மாறியது. பெரிய அண்ணன் தோரணையில் அபிஷேக் நடந்து கொண்டார். நேற்று அபிஷேக்கிற்கு பிறந்தநாள் என்று கூறப்பட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் கேக் வெட்டப்படும் என்று அவரை உள்ளே அனுப்பும் போது கமல்ஹாசன் கூறித்தான் அனுப்பி வைத்தார்.

பெரியண்ணன் தோரணையில் அபிஷேக்
வீட்டுக்குள் சென்றவர் கேக் வெட்டும் வரை சும்மா இருந்திருக்கலாம். ஆனால் தனக்கு இன்று பிறந்தநாள் என்று வெளிப்படையாக தெரிவித்தார். உடனே ராஜு ஜெயமோகன், அப்படி என்றால் கையில் உள்ள சாக்லேட்டை கொடுங்கள் என்று அவராகவே கேட்டார். ஒவ்வொரு போட்டியாளர்களும் சாக்லேட் டப்பா ஒன்று கொடுத்து அனுப்பப்பட்டது. அதிலிருந்து எடுத்துக் கொடுத்தால் வேலை முடிந்தது. ஆனால் அதைத் தராமல் "எல்லோரும் வந்து விடட்டும், அதற்கு பிறகு தருகிறேன்" என்று உத்தரவு போடும் தொனியில் கூறினார் அபிஷேக். மேலும் வந்ததும் வராததுமாக மற்ற போட்டியாளர்களிடம் ராஜு ஜெயமோகனை கிண்டல் கேலி செய்வதாக இருந்தார். ஆனால் இவர் மட்டும் என்னை யாரும் கிண்டல் செய்து விட முடியாது என்பது போல முகத்தை ரொம்பவே இறுக்கமாக வைத்துக் கொண்டார். இந்த சீசனில் 'வாட்ச் செய்யவேண்டிய வால் கிளாக்காக' அபிஷேக் இருப்பார் என்பதை முதல் நாளிலேயே புரிந்துகொள்ள முடிந்தது.

சிரித்த முகத்தோடு நமிதா மாரிமுத்து
அதேநேரம் நமிதா மாரிமுத்து எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தார். கமல்ஹாசனிடம் பேசும்போதும் சரி வீட்டுக்குள் வந்த பிறகும் சரி அவரது முகத்தில் ஒரு நிமிஷம் கூட சிரிப்பு என்பது இல்லாமல் இல்லை. ஆனால் அமைதியாக இருக்கும் கடலில் திடீரென புயல் வீசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது பிரியங்கா அந்த வீட்டுக்குள் வந்த பிறகு. தனது வழக்கமான ட்ரேட்மார்க் சிரிப்பான "ஹா ஹா ஹா ஹா" என்று சிரிப்போடு அரங்கை அதிர வைத்தார் பிரியங்கா.

சத்தமாக பேசிய பிரியங்கா
அதுவரை போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருந்தது ரசிகர்களுக்கு காதில் சரியாக விழவில்லை ஆனால் பிரியங்கா அந்த வீட்டுக்குள் வந்ததும் வால்யூம் குறைப்பதற்காக ரசிகர்கள் ரிமோட்டை தேட ஆரம்பித்து விட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிரியங்கா அந்த வீட்டுக்குள் வந்த பிறகு அவர் பேசியது தான் சத்தமாக கேட்டது. அவர் பேசியது மட்டும் தான் கேட்டது.

போகப் போகத் தெரியும்
இதெல்லாம் போட்டியாளர்கள் முதல் நாளில் நடந்துகொண்ட விதம். முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படும் போது இயல்புக்கு மாறாக அல்லது செயற்கையாக இவர்கள் செயல்பட்டிருக்க கூடும். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவரின் உண்மை குணமும் வெளியே வந்து தான் தீரும். அப்போது யார் எப்படிப்பட்டவர்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியத்தான் போகிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications