For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேடை, தாலி, மாலை எல்லாம் ரெடி! ஃபுல் போதையில் மேடையேறிய மணமகன்! அப்பறம் நடந்துதான் ட்விஸ்டே..!

Google Oneindia Tamil News

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மணமகன் குடித்து விட்டு வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் தான் மணப்பெண் ஒருவர் திருமண விழாவில் மணமகன் குடிபோதையில் வந்ததால் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

ரோவா பகுதியைச் சேர்ந்த பிரபல ஆசிரியரான ஆசிரியர் வினோத் சுக்லாவின் மகள் நேஹாவுக்கும், நேரு நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற துணை இயக்குநர் நாகேந்திரமணி மிஸ்ராவின் மகன் பியூஷ் மிஸ்ராவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

வந்துட்டேன்னு சொல்லு! போரில் மீண்டும் ஓங்கும் உக்ரைனின் கை! போரின் போக்கு மாறுகிறதா? பரபர பின்னணி..!வந்துட்டேன்னு சொல்லு! போரில் மீண்டும் ஓங்கும் உக்ரைனின் கை! போரின் போக்கு மாறுகிறதா? பரபர பின்னணி..!

திருமண நிகழ்ச்சி

திருமண நிகழ்ச்சி

திருமணத்திற்காக மேடை அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மண்டபத்தில் விருந்தினர்கள், உறவினர்கள் என அனைவரும் வந்துவிட்டனர். இந்நிலையில் தான் மணமகனின் இந்த செயலால் அதிச்சியடைந்த மணமகள் திருமணம் செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். அதற்கு காரணம் சிறிது நேரத்தில் தனக்கு கணவனகப் போகும் நபர் திருமண விழாவில் குடிபோதையில் வந்ததால் தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

மது போதை

மது போதை

மணமகன் மட்டுமல்ல திருமணத்திற்கு வந்திருந்த அவரது நண்பர்கள் பலரும் முழுக்க முழுக்க குடிபோதையில் இருந்துள்ளனர். திருமண ஊர்வலத்தில் மணமகளின் குடும்பத்தினர் வரவேற்று, மணமக்களுக்கு மாலை அணிவித்து மேடையில் ஏறிய பிறகு, மணமகன் போதையில் இருந்ததை உணர்ந்த மணமகள் நேகா, பியூஷ் மிஸ்ராவை மணமுடிக்க முடியாது எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.

திருமணம் நிறுத்தம்

திருமணம் நிறுத்தம்

எல்லோரும் நேஹாவை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றும், திருமண நாளில் மதுவை கைவிட முடியாதவன், திருமணத்திற்குப் பிறகு என்ன செய்வான் என வாதிட்ட அவர், பியூஷ் மிஸ்ராவை எக்காரணத்தைக் கொண்டும் திருமணம் செய்ய முடியது என உறுதியாக நின்றார். அவரது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அவரது முடிவை முழுமையாக ஆதரித்த நிலையில் கடைசியில் திருமணமும் நின்று போனது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மணப்பெண்ணுக்கு பாராட்டு

மணப்பெண்ணுக்கு பாராட்டு

அதில் திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், மணமகளின் செயலால் பணம் வீணானதோடு உறவினர்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனாலும் தனது முடிவில் விடாப்பிடியாக நேஹா இருந்ததால் போலீசாராலும் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு செலவு செய்யப்பட்ட பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை திருப்பித் தர இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்ட நிலையில் திருமணம் நின்று போனது. கணவன் குடிகாரன் என தெரிந்து திருமணத்தை நிறுத்திய பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

English summary
In the state of Madhya Pradesh the incident where the bride stopped the wedding because the groom was drunk till a few minutes before is being shared fast on social websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X