தீபாவளிக்கு வீட்டில் ஸ்வீட் செய்து கஷ்டப்பட வேண்டாம்: அதான் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இருக்கே!

By: Soundharya M
Subscribe to Oneindia Tamil
  தீபாவளிக்கு வீட்டில் ஸ்வீட் செய்து கஷ்டப்பட வேண்டாம்-வீடியோ

  சென்னை: இப்போ எப்படித்தான் சிட்டி லைஃப்க்கு மாறினாலும் பழைய காலத்து ருசியை மீட்டு கொண்டு வர முடியாது. அத்தகைய ருசியை உங்க கைக்கு கொண்டு வந்து கொடுப்பதற்காகவே இருக்கின்றது நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.

  இங்க உங்களுக்கு என்ன வேணும் கோவில் பஞ்சாமிர்தம் வேணுமா? மலை தேன், திருநெல்வேலி அல்வா, மக்ரூன்? இன்னும் நிறைய இருக்கின்றது. ஸ்நாக்ஸ், விசேஷ வீட்டுக்கு ஸ்வீட்ஸ் இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம். அவ்வளவும் ஒரே இடத்தில், நேட்டிவ்ஸ்பெஷல்.காம்.

  Diwali traditional sweets is just a click away with Nativespecial.com

  நேட்டிவ் ஸ்பெஷலின் நிறுவனர் திரு. பார்த்திபன் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன் இந்தியாவிற்கு பிரத்தியேகமாக அளித்த சிறப்பு பேட்டி.

  கேள்வி: ஸ்வீட்க்கான ஐடியா எப்படி வந்தது ?

  பதில்: எனக்கு முன்னாடி இருந்தே பாரம்பரிய பொருட்கள் மீது தனி விருப்பம் இருந்தது. நான் 2008 -ல் அமெரிக்காவில் இருந்தபோது இத்தாலி பலகாரம் கொண்டு வந்து கொடுத்தார்கள். அது நம்ம ஊரு தேங்காய் மிட்டாய் மாதிரி தான் இருந்தது. ஆனால், அது பிராண்ட் மற்றும் நல்ல பேக் பண்ணி இருந்தது. அதுமட்டுமில்லால் உலக நாடுகள் முழுதும் விநியோகிக்கப்பட்டது. அதை பார்க்கும் பொது நம்ம ஊரு இனிப்புகள் அதற்க்கு எந்த வகையிலும் குறைஞ்சது இல்லனு தோனிச்சு.

  மருத்துவ குணமும் சரி, ருசியும் சரி ஆரோக்கியமான தின்பண்டம் நம்மளிடமே உள்ளது. ஆனால் நாம் அதை ஓர் இடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டு போக தவறிவிட்டோம். அதைவிட்டு வெளிய வந்து வெளிநாட்டு பொருட்களை சாப்பிட துவங்கிவிட்டோம். இதுக்கு சராசரியான பொருட்கள் நம்மளிடமும் உள்ளது. அதை திரும்ப எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்பொழுது தான் வந்தது. அதன் பிறகு தான், நான் இந்தியாவிற்கு வந்து தொழிலை தொடங்கினேன்.

  கேள்வி: ஆன்லைன் ஐடியா எப்படி வந்தது ?

  பதில்: எங்களுடைய குறிக்கோள் பாரம்பரிய உணவுகளை எல்லா இடங்களில் உள்ள அனைவருக்கும் வழங்குவதே.

  கேள்வி: உங்கள் வழிகாட்டி யார் ?

  பதில்: எங்களை பொறுத்தவரை வழிகாட்டி எங்கள் ஐடியா தான். இது நான், என் தம்பி, மற்றும் என்னுடைய நண்பன் மூன்று பேரும் இணைந்து தான் இந்த தொழிலை செய்து கொண்டிருக்கின்றோம்.

  கேள்வி: உலக நாடுகள் முழுவதும் விற்பனை செய்வது எப்படி உள்ளது ?

  பதில்: எல்லா இடங்களிலும் எல்லாருக்கும் இது கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், நன்றாகவே உள்ளது. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை இங்கே இருந்து அனுப்பும் பொழுது செலவு தான் அதிகமாகும். ஆனால், இது மக்களுக்கு பிடித்துள்ளது.

  கேள்வி: வாடிக்கையாளரின் விமர்சனங்கள் எப்படி இருந்தது ?

  பதில்: ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. சாப்பாடு பொருட்களை எப்படி பேக் செய்வது ? எப்படி கையாள்வது என்ற பிரச்சனை வந்தது. அதற்க்கு அப்பறம் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரிசெய்து வந்துவிட்டோம். இப்பொழுது வரவேற்பு நன்றாகவே உள்ளது.

  கேள்வி: நேட்டிவ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் ஸ்வீட் என்ன ?

  பதில்: திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று 60 வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

  கேள்வி: ஜிஎஸ்டியால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா ?

  பதில்: அனைவரும் இப்பொழுது தான் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றனர். அதனால், அதை பற்றிய முழுவிபரமும் இன்னும் வரவில்லை.

  கேள்வி: நேட்டிவ் ஸ்பெஷலின் தீபாவளி ஸ்பெஷல் என்ன ?

  பதில்: ஸ்பெஷலாக கிப்ட் பாக்ஸ் போடுறோம். நிறைய மிக்ஸிங் ஸ்வீட்ஸ் பன்றோம்.

  கேள்வி: ஏதேனும் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்தது உண்டா?

  பதில்: கஷ்டமான சூழ்நிலைகளை கிட்டத்தட்ட கடந்து வந்துவிட்டோம். ஆனால், தொழில் போட்டிகளுக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

  கேள்வி: தனியாக தொழில் பண்ண கரணம் ?

  பதில்: நேட்டிவ் ஸ்பெஷல் தனி ப்ராண்டா இருக்கணும். மற்றவைகளோடு இணைந்து இருக்க விருப்பம் இல்லை.

  கேள்வி: தீபாவளி ஆஃபர் ஏதேனும் இருக்கா ?

  பதில்: NSONE100 கூப்பன் பயன்படுத்தி சிறப்பு தீபாவளி ஆபர் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் பெறலாம்.

  நமக்கு நிறைய வகைவகையா சாப்பிட இருக்கு. ஆனால், இப்போவும் நாம பாட்டி சமையலை மிஸ் பண்ணுகின்றோம். ஏன்னென்றால் பாட்டி சமையலில் ருசி மட்டுமல்லாது ஆரோக்கியமும் இருக்கும். அப்படி ஏங்குபவர்களை மனதில் கொண்டே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

  ஆன்லைனில் உங்களுக்கு பிடித்த ஸ்வீட்டை ஆர்டர் பண்ணுங்க, நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் இடத்துக்கே வந்து சேரும். இனி எதுக்கு கவலை? ஆர்டர் பண்ணுங்க சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க...நேடிவ்ஸ்பெஷல்.காம்.

  இந்த தீபாவளியை நேட்டிவ் ஸ்பெஷலின் பாரம்பரிய இனிப்புகளுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Nativespecial.com has come forward with Diwali special sweets to make the festival of lights a memorable one. Order now and enjoy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற