For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியது ஸ்டேட் பேங்.. கார், வீட்டு லோன் வட்டி எகிறும்

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: நாட்டின் முதன்மை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இன்று அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரூபாய் மதிப்பின் தடுமாற்றத்தால் வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை கடன்களுக்கான வட்டியை 0.25% உயர்த்தியிருந்தன.

இந்த நிலையில் முதன்மை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இன்று தமது கடன்களுக்கான வட்டி விகித அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால் கடன்கள் மற்றும் டெபாசிட்டுகள் மீதான வட்டிகள் அதிகரித்துள்ளன.

வீட்டு கடன்களுக்கான வட்டி

வீட்டு கடன்களுக்கான வட்டி

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 9.95%-ல் இருந்து 10.10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ 30 லட்சம் வரையிலான அனைத்து கடன்களுக்கும் பொருந்தும்.

ரூ30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு..

ரூ30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு..

ரூ30 லட்சத்துக்கும் மேலான வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்கெனவே உள்ள 10.10.%ல் இருந்து 10.30% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார் கடன்களுக்கான..

கார் கடன்களுக்கான..

கார் லோன்களுக்கான வட்டி விகிதம் 10.45%-ல் இருந்து 10.75% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தனிநபர் கடன்களுக்கான வட்டியில்?

தனிநபர் கடன்களுக்கான வட்டியில்?

அதே நேரத்தில் தனிநபர் கடன்களுக்கான வட்டியில் எந்த மாற்றத்தையும் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா அறிவிக்கவில்லை.

டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்

டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்

7 நாள் முதல் 179 வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.5%-ல் இருந்து 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

180-210 நாள் டெபாசிட்டுகளுக்கு..

180-210 நாள் டெபாசிட்டுகளுக்கு..

அதேபோல் 180 முதல் 210 நாள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.5%-ல் இருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

211 நாட்கள் ..

211 நாட்கள் ..

211 நாட்கள் முதல் ஓராண்டுக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இனிமேல் 6.5-ல் இருந்து 7.5% ஆக இருக்கும்.

ஓராண்டு முதல் 10 ஆண்டுகாலத்துக்கு..

ஓராண்டு முதல் 10 ஆண்டுகாலத்துக்கு..

ஓராண்டு முதல் 10 ஆண்டுகாலத்துக்கான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8.75%-ல் இருந்து 9% ஆக உயர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
State Bank of India, the country's largest lender, today raised its home loan rates to 10.10 per cent from 9.95 per cent earlier, the bank announced today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X