For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசாப்பு கடையான ஐபிஎம்... முன் அறிவிப்பு இன்றி நடைபெற்ற ஆட்குறைப்பு...

Google Oneindia Tamil News

பெங்களூர்:ஐபிஎம் நிறுவனத்தின் ஆட்குறைப்பு செயல்பாட்டினால் அதன் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் ஐபிஎம் நிறுவன கிளைகளில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் இதனால் 100க்கும் மேற்பட்டோர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

நம்ப வைத்து கழுத்தறுத்த ஐபிஎம்:

நம்ப வைத்து கழுத்தறுத்த ஐபிஎம்:

பெங்களூரில் உள்ள ஐபிஎம்மின் ஒரு கிளையான "எஸ்.டி.ஜி" கசாப்பு கடையாக செயல்பட்டுள்ளதாக ஒரு ஊழியர் மனத்தாங்கலுடன் கூறியுள்ளார்.

மனிதாபிமானமற்ற செயல்:

மனிதாபிமானமற்ற செயல்:

ஐபிஎம்மின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் தாங்கள் மனமுடைந்து போய் இருப்பதாக அதன் ஊழியர்களுக்கான வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் ஆட்குறைப்பு:

தொடரும் ஆட்குறைப்பு:

இந்த ஆட்குறைப்பு 1000 எண்ணிக்கை வரை தொடரும் என ஐபிஎம்மால் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும்,இத்துறையில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது.

இந்தியாவிற்கு புதிது:

இந்தியாவிற்கு புதிது:

வேலை குறைப்பு நடவடிக்கை இந்தியாவை பொருத்த வரை புதிது என்றாலும்,இந்திய கம்பெனிகள் எப்போதாவது ஆட்குறைப்பில் ஈடுபடும்.

பறிக்கப்பட்ட லேப்டாப்கள்:

பறிக்கப்பட்ட லேப்டாப்கள்:

பறிக்கப்பட்ட லேப்டாப்கள்: பெங்களூரின் எஸ்டிஜி,தனது ஊழியர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி அழைத்து அவர்களுடைய லேப்டாப்புகளை பறிமுதல் செய்து கொண்டு உடனடியாக வெளியேற சொல்லியுள்ளது.

ஆறு வார சம்பளம் மட்டுமே:

ஆறு வார சம்பளம் மட்டுமே:

அவர்களுக்கு ஆறு வாரத்திற்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கண்ணீர் விட்ட ஊழியர்கள்:

கண்ணீர் விட்ட ஊழியர்கள்:

"பல ஊழியர்கள் கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறியது மிக கொடுமையாக இருந்தது"என வெளியேற்றப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களும் மனிதர்கள்தான்:

இந்தியர்களும் மனிதர்கள்தான்:

இந்தியர்களும் மனிதர்கள்தான்: ஐபிஎம் ஊழியர்களுக்கான வலைத்தளத்தில் பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் "இந்தியர்களை நீங்கள் வெறும் மூலதனத்திற்கான சாதனங்களாக நடத்தி உள்ளீர்கள்.அவர்களும் மனிதர்கள்தான்"என எழுதியுள்ளனர்.

இந்திய நிறுவனங்களின் சம்பள உயர்வு:

இந்திய நிறுவனங்களின் சம்பள உயர்வு:

இதற்கு எதிர்மாறாக இந்திய நிறுவனங்களான இன்போசிஸ்,டிசிஎஸ் ஆகியவை சம்பள உயர்வையும்,புதிய பணிக்கான இடங்களையும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Job cuts arrived at multiple IBM locations in India this week and hundreds more layoffs are expected in the coming days.In Bangalore, one IBM unit called STG, the company’s hardware division, turned into a “slaughter house” a worker reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X