புத்தம் புது டிசைனில் 10 ,50, 200,100 ரூபாய் நோட்டுக்கள்... ரிலீஸ் செய்யும் ரிசர்வ் வங்கி

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil
  பச்சை நிறத்தில் மீண்டும் வந்த ஒரு ரூபாய் நோட்டு!- வீடியோ

  டெல்லி: சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில் 10 ரூபாய்,50 ரூபாய், முதல் 200 ரூபாய் வரையிலும் முற்றிலும் புதிய வடிவத்தில் அச்சிட்டு புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

  கடந்த 2016ம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பின்பு முற்றிலும் புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டும் கூடவே உயர் மதிப்புடைய 2000 நோட்டுக்களும் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டன. இருந்தாலும் குறைந்த மதிப்பிலான 10 முதல் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

  RBI release soon new 10, 50 200 Rupee notes

  குறைந்த மதிப்புடைய 10 முதல் 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தாலும் அவை பெரும்பாலும் பாதி கிழிந்த நோட்டாகவும் வரிசை எண்கள் கிழிந்த நோட்டுக்களாகவும் தான் பொது மக்களுக்கு கிடைத்து வந்தன.

  புத்தம் புதிய நோட்டுக்கள் எல்லாம் பெரும்பாலும் வங்கிகளில் பரிச்சையமான வாடிக்கையாளர்களுக்கும் நிறுவன வாடிக்கையாளர்களுக்குமே கிடைத்துவந்தன. இதனால் சாதாரண வாடிக்கையாளர்களும் பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்துகொண்ட ரிசர்வ் வங்கியும் விரைவில் முற்றிலும் புதிய வடிவத்தில் 50 முதல் 200 வரையிலும் ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கி அறிவித்தது போலவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி முற்றிலும் புதிய வடிவத்தில் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு விட்டது.

  புதிய 200 ரூபாய் நோட்டுக்களில் அசோகர் காலத்திய இந்தியாவின் பாரம்பரியம் மிக்க அறிய கலை, கலாச்சார பண்பாட்டு சின்னமான சாஞ்சி ஸ்தூபியின் படம் அச்சிடப்பட்டிருந்தது.

  புதிய 200 ரூபாய் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டாலும், அவை முதலில் அனைத்து வங்கிகளின் கிளைகளில் மட்டுமே கிடைக்கப்பட்டு வந்தன. வங்கிகளின் ஏடிஎம்களில் அவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் அவை முற்றிலும் அளவில் மாறுபட்டு இருந்ததால், அவற்றிற்கு ஏற்றவாறு ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்ததால் அவை பொதுமக்களுக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

  அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களும் 200 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்ட பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் ஏடிஎம் மூலமும் 200 ரூபாய் நோட்டுக்களை எடுத்துவந்தனர். ஆனால் அதே சமயத்தில் அனைத்து வங்கி கிளைகளிலும் 200 நோட்டுக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

  வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு மட்டுமே 200 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்து வந்தன. வங்கி ஊழியர்களிடம் விசாரித்தால் அவர்கள் வங்கி ஊழியர்களிடம் விசாரித்தால் அவர்கள் “நாள் ஒன்றுக்கு ஒரு வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய்க்கு மட்டுமே 200 ரூபாய் நோட்டுக்கள் வழங்க வேண்டும் என்று எங்களுக்கு மேலிடத்தில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது என்று கூறுகின்றனர்.

  இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு புழக்க்திற்கு விடப்பட்டன. இவற்றில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஹம்பி கல்தேர் படம் அச்சிடப்பட்டிருந்தது. கூடவே சுகாதாரத்தை வலியுறுத்தும் சுவாச் பாரத் லோகோவும் அச்சிடப்பட்டிருந்தன.

  புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டாலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கிடைத்து வந்தன. வங்கிகளில் கேட்டாலும் அவர்கள் எங்களுக்கு ரிசர்வ் வங்கிகளில் இருந்து புதிய ஐம்பது ரூபாய் மற்றும் பழைய ஐம்பது ரூபாய் நோட்டுக்களும் சரிவர கிடைப்பதில்லை” என்று பதில் தருகிறார்கள். இதனால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் குறைந்த மதிப்பிலான நோட்டுக்கள் கிடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

  இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது மீண்டும் 10 முதல் 200 வரையிலும் ரூபாய் நோட்டுக்களை புதிய வடிவத்தில் அச்சிட்டு புழக்கத்திற்கு விடப்போவதாக அறிவித்தது. அதேபோல புதிய நோட்டுக்கள் சாக்லேட் வண்ணத்தில் வடிவத்தில் சிறிய நோட்டுக்களாய் உள்ளன. அதில் கொனார்க் சூரிய கோவில் அச்சிடப்பட்டுள்ளது.

  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது.

  புதிய 10 ரூபாய் நோட்டுக்கள், சாக்லேட் பழுப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் எப்போதும் போலவே மகாத்மா காந்தியடிகள் சிரித்துக்கொண்டு இருக்கிறது. தேவநகரி எழுத்துக்களிலும் 10 ரூபாய் என்று மின்னும். பாதுகாப்பு அம்சங்களுடன் ஆர்பிஐ என்ற எழுத்துக்கள் மின்னுகிறது. வலது கீழ்புறத்தில் அசோக சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கொனாரக் சூரியனார்

  கோவில் கல்தேர் சச்சரமும் அச்சிடப்பட்டிருக்கிறது.

  வரிசை எண்களும் சின்ன எழுத்தில் ஆரம்பித்து பெரிய எழுத்துக்களில் முடியும். ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடமும் இடம் பெற்றிருக்கும். கீழ்புறத்தில் 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களில் உள்ளது போலவே காட்டு விலங்குகளான புலி, யானை மற்றும் காண்டாமிருகம் ஆகியவற்றின் படமும் அச்சிடப்பட்டிருக்கிறது.

  கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுக்கள் பார்த்து அறிவதற்கு சிரமமாக இருப்பதால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும் என்று டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனவேதான் அவற்றை திரும்ப பெற்றுக்கொண்டு முற்றிலும் புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

  10, 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் மக்கள் கைகளுக்கு தாராளமாக கிடைத்த பின்னர் 2019ம் ஆண்டின் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டின் அதே அளவில் மாறுபட்ட வடிவத்தில் அச்சடிக்கும் பணி தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The newly released 50 Rupee currency notes is already in trouble for not being visually impaired friendly and not make it to the ATM also. RBI will shortly issue 10 Rupee denomination bank notes in the Mahatma Gandhi (New) Series, bearing Signed by Governor Urjit R Patel.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற