பதவியேற்கும்போதே சர்ச்சையில் பகவந்த் மான்.. - பார்கிங் வசதிக்காக 40 ஏக்கர் கோதுமை நிலத்தை அழித்தாரா?
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கும் கிராமத்தில் 40 ஏக்கர் கோதுமை விளை நிலத்தை அழித்து, பார்கிங் ஏற்பாடு செய்திருப்பதாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். பகத்சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்காது என்று பகவந்த் மான் கூறினார். பகத்சிங் பிறந்த கத்தர் கலனில்
பகவந்த் மான் முதல்வராக பதவியேற்கவுள்ள இந்த விழாவில் பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த விழாவில் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வரும் அனைவரையும் மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஏற்பாடு
முதல்வராக பதவி ஏற்பதற்கு முன், தன்னுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

பார்கிங் வசதி
பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க இருப்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, பார்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பார்கிங் வசதிக்காக கட்கர் கலனில் இடம் இல்லாததால், கோதுமை விளையும் நிலத்தில் பார்கிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவடை முடியும் முன்பே, அந்த கோதுமை பயிர்களை மொத்தமாக நீக்கிவிட்டு அந்த இடத்தில் பார்கிங் வசதி கொண்டுவரப்படுகிறது.

இழப்பீடு
பார்கிங் வசதிக்காக மட்டும் 40 ஏக்கர் கோதுமை விளைந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 46,000 ரூபாய் பஞ்சாப் அரசு வழங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த இடத்தை தலைமைச் செயலாளர் வேணு பிரசாத் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து வேறு எந்த அதிகாரிகளும் வாய்திறக்காமல் இருக்கிறார்கள். இதனால் பதவியேற்கும் நாளிலேயே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பகவந்த் மான் என்று பஞ்சாப் மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications