நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்!
சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலித்து அரசியலுக்குள் நுழைந்து முதல்வர் பதவியை பிடித்துள்ள பகவந்த் மான் முன்பு 3 மிகப்பெரும் சவால்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாப்பில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி ஆம்ஆத்மிக்கு ஓட்டளித்துள்ளனர். தனிப்பெரும்பான்மையுடன் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் டெல்லியை தொடர்ந்து 2வது மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி தனது ஆட்சியை விரிவுப்படுத்தி உள்ளது. முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் என்பவரை ஆம்ஆத்மி அறிவித்து தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றுள்ளது.

யார் இந்த பகவந்த் மான்
பஞ்சாப்பிபன் சங்ரூர் மாவட்டம் சடோஜ் கிராமத்தை சேர்ந்தவர் பகவந்த் மான். கல்லூரி படிப்பை முடித்த பிறகு பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்தார். கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளிலும், இளைஞர் நகைச்சுவை விழாக்களிலும் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றார். இந்தியாவின் பிரச்சனைகள், அரசியல் தொடர்பாக மக்களிடம் நகைச்சுவையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சினிமாக்களிலும் நடித்துள்ளார். 2011 இல் பஞ்சாப் மக்கள் கட்சி மூலம் அரசியலில் அறிமுகமானார். 2014ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். சங்ரூர் பாராளுமன்ற தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்றார். தற்போது பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் ஆனால், நகைச்சுவை நடிகராகவும், எம்பியாகவும் செயல்பட்ட பகவாந்த் மான் பஞ்சாப் முதல்வரானதால் மூன்று முக்கிய பிரச்சனைகள் உள்ளன. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

கெஜ்ரிவாலின் தலையீடு
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மிக முக்கிய குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்தனர். அதாவது பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றால் பகவாந்த் மான் பேருக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அரவிந்த் கெஜ்ரிவால் தான் கட்டளையிடும் முதல்வராகவும், அதிகாரம் படைத்த முதல்வராகவும் இருப்பதாக குற்றம்சாட்டின. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் கூட பகவாந்த் மான் இந்த பிம்பத்தை உடைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் கிராமப்புறங்களில் அவர் பிரசாரம் செய்தபோது முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும் முதல்வராகவும், மக்கள் குறைகளுக்கு செவிசாய்க்கும் முதல்வராகவும் இருப்பதாக கூறினார். இதனால் கெஜ்ரிவாலின் தலையீடு இல்லாத நிர்வாகத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான மோதல்கள்
பகவாந்த் மானுக்கு 2வது மிகமுக்கிய சவால் என்பது டெல்லி, பஞ்சாப் இடையேயான மோதல்கள் தான். சட்லஜ், யமுனை நதிகள் இணைப்பு, காற்று மாசு பிரச்சனைகளில் இருமாநிலங்கள் மோதி வருகின்றன. இதுதவிர காலிஸ்தான் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தேவிந்தர் பால் சிங் புல்லரை விடுவிக்கும் பிரச்சனை உள்ளது. இவர் 1993ல் டெல்லியில் குண்டுவெடிப்பில் தண்டனை பெற்று திகார் சிறையில் உள்ளார். இவரை விடுதலை செய்ய சில சீக்கிய அமைப்புகளும், சிரோமணி அகாலிதளத்தினரும் வலியுறுத்தி வருகின்றர். இந்த மாத துவக்கத்தில் தேவிந்தர் பால்சிங் புல்லரின் தண்டனை மறுஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தள்ளிபோனது. தற்போது இந்த பிரச்சனை நேரிடையாக பகவாந்த் சிங்க்கு அழுத்தம் கொடுக்கும்.
Recommended Video

பிரிவினைவாத குழுக்கள்
தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப்பை பிரிக்க நினைக்கிறார். தனி மாநிலமாக்க முயற்சிக்கிறார். அவர் பிரிவினைவாத குழுக்களுக்கு ஆதரவாக உள்ளார் என காங்கிரஸ், பாஜக கட்சியினர் குற்றம்சாட்டின. இதை பகவாந்த் மான் மாற்ற வேண்டும். மேலும் பிரிவினைவாத குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதை தடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆம்ஆத்மிக்கான நன்கொடையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நன்கொடை வழங்கும் அமைப்பு, நபர்களில் சிலர் பிரிவினைவாதிகள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்களாக இருக்கலாம். எனவே இது கடினமாக பணியாக இருக்கும். மேலும் பிரிவினைவாத குழுக்களின் ஆதரவாளர்களை ஆட்சியில் கருத்து கூறவிடாமல் தடுப்பது முக்கியமாகும். இதுதொடர்பான தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாள்வதில் கெஜ்ரிவாலுக்குக் கூட எந்த யோசனையும் இல்லை என கூறப்படும் நிலையில் பகவாந்த் மான் இதை சமாளித்தே ஆக வேண்டும். அத்துடன் பிரிவினைவாத ஆதரவாளர் என்ற பெயர் எடுக்காமல் கவனமாக செயல்படுவது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications