அகாலிதளம், காங்கிரசை தாண்டி.. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி.. எப்படி நடந்தது மேஜிக்? மொத்தம் 5 காரணம்
சண்டிகர்: பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. காலம் காலமாக பஞ்சாப்பில் ஆட்சி செய்து வந்த சிரோமணி அகாலிதளம், காங்கிரஸ் கட்சிகளை ஆம்ஆத்மி கட்சி விரட்டியடித்து சாதனை படைத்துள்ளது. ஆம்ஆத்மியின் இந்த வெற்றிக்கு முக்கிய 5 காரணங்கள் உள்ளன.
பஞ்சாப்பில் முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, காலம் காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளை பின்னுக்கு தள்ளி பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேய்ந்து வரும் நிலையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக ஆம்ஆத்மி தேசிய அரசியலில் சாதிக்க வாய்ப்புள்ளதாக அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

70 ஆண்டு வரலாறு மாற்றம்
மேலும் டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்திருப்பது அக்கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்த பிரதமர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் என அவர்கள் பிரசாரத்தை முன்னெடுக்க துவங்கியுள்ளனர். கருத்து கணிப்பு முடிவுகள்படி ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் அமோக வெற்றி பெற்றுள்ளது.70 ஆண்டு கால பஞ்சாப் வரலாற்றில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி)கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. பஞ்சாப்பின் பாரம்பரியமாக திகழ்ந்த இந்த 2 கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி ஆம்ஆத்மி இந்த சாதனையை செய்துள்ளது. ஆம்ஆத்மியின் இந்த வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

மாற்றத்துக்கான குரல்
பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் மவுனம் காத்ததாக சிரோமணி அகாலி தளம் கட்சி மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து காங்கிரஸ், அகாலிதளம் கட்சிகள் நாணயத்தின் இருபக்கங்கள் என ஆம்ஆத்மி பிரசாரம் செய்தது. மாற்றத்துக்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டும். ஆம்ஆத்மிக்கு ஓட்டளிக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சியினர் மேற்கொண்ட பிரசாரம் அவர்களுக்கு கைக்கொடுத்துள்ளது. மேலும் 70 ஆண்டுகளாக இரண்டு பெரிய கட்சிகள் ஆட்சி செய்தாலும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என ஆம்ஆத்மி பட்டியலிட்டு பணி செய்தது மக்களை கவரும்படி இருந்தது. இது தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

டெல்லி மாடல்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டெல்லி மாதிரி ஆட்சியை பஞ்சாப்பில் கொடுப்பதாக கூறினார். அரசு சார்பில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், மலிவு விலையில் சுத்தமான குடிநீர் வழங்குவதாக தொடர்ந்து கூறினார். பஞ்சாப்பில் சுகாதாரம், கல்விக்காக மக்கள் பெரும்பாலும் தனியாரிடம் அதிகம் செலவழிக்கின்றனர். இந்த சூழலில் ஆம்ஆத்மி கட்சியின் இந்த பிரசாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களிடம் செல்வாக்கு
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சிக்கு இளைஞர்கள், மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. ஊழலை ஒழித்து, கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் எனும் பிரசாரங்கள் இளைஞர்களையும், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பெண்களையும் ஆம்ஆத்மிக்கு ஆசி வழங்க செய்தது. ரூ.1000 வழங்கும் திட்டம் தேர்தலுக்கு பின் நடைமுறைக்கு வராமல் போகலாம் என்ற கருத்து நிலவிய நிலையிலும் பெண்களிடம் தனிசெல்வாக்கு இருந்ததை ஆம்ஆத்மி நிரூபித்துள்ளது.

முதல்வர் முகமாக பகவந்த் மான்
பஞ்சாப்பில் வெளிநபர்கள் மற்றும் புதிய நபர்களை முதல்வர் வேட்பாளராக ஆம்ஆத்மி அறிவிக்கவில்லை. மாறாக முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டார். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பதும், அரசியல், சமூக பிரச்சனைகளை காமெடியாக வெளிப்படுத்தி பஞ்சாப் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும், நேர்மையுடன் வாடகை வீட்டில் வசிக்கும் மண்ணின் மைந்தன் என்பதும் மக்கள் மத்தியில் அவர் மீது கனிவை ஏற்படுத்தியது. அத்துடன் ஒவ்வொரு தேர்தல் வெற்றியின்போதும் அவரது சொத்து மதிப்பு அதிகரிப்பதை விட குறைந்து வருவதை கூறி ஓட்டு கேட்டது மக்களிடம் ஆம்ஆத்மிக்கு ஆதரவான அலையை வீச செய்துள்ளது.
Recommended Video

ஆம் ஆத்மியிடம் பதில்
மேலும் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த விவசாய போராட்டம் பாஜக மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் தொடர்ந்து பஞ்சாப்பில் மாறிமாறி காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளை ஆட்சி அமைப்பதை தடுக்க இந்த போராட்டம் வழிவகுத்தது. மேலும் பாரதிய கிசான் அமைப்பு எனும் பிகேயூ(உக்ரஹான்) விவசாய சங்க தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹானும் ஆம்ஆத்மி எழுச்சிக்கு ஒரு காரணமாக இருந்தார். அதாவது 69 சட்டசபை தொகுதிகளை கொண்ட மால்வா பிராந்தியத்தில் அவரது சங்கம் செல்வாக்காக உள்ளது. அவர் எழுப்பிய கேள்விகள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. தேர்தல் நேரத்தில் அவர் பேசும்போது, ‛‛சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் பஞ்சாப்பை ஆண்ட கட்சிகள் ரோடு, வடிகால் வசதிக்கு அடுத்தபடியாக சிந்திக்காதது ஏன்'' என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு ஆம் ஆத்மியிடம் பதில் இருப்பதாக நினைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் தான் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications