பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்கிறார் நவ்ஜோத் சிங் சித்து.. ராஜினாமாவை திரும்ப பெற்றார்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இங்கு உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கும், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவியது
இடையில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும், அமரீந்தர் சிங்கும் டெல்லி சென்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

பஞ்சாப் உட்கட்சி பூசல்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏதும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்று சோனியா காந்தி அவர்களை சமாதானம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங்குக்கு எதிராக அனைவரும் திரண்டனர். முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா
இதனை தொடர்ந்து அமரீந்தர்சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து காங்கிரசில் இருந்தும் விலகிய அமரீந்தர்சிங், புதிய கட்சியையும் ஆரம்பித்தார்.
அமரீந்தர்சிங் விலகியதால் பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதாரவாளர் ஆவார். இதற்கிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்து இருந்தார்.

ராஜினாமாவை திரும்பப் பெற்றார்
அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து அவர் டெல்லி சென்று ராகுல் காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றார் நவ்ஜோத் சிங் சித்து.

திரும்பப் பெற்றுள்ளேன்
இது தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து. கூறுகையில், 'நான் எனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளேன். புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்பட்டதும் கட்சி அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்பேன் என்று கூறியுள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications