"நான் முதல்வரானால்.." ரிசல்ட் வெளியாகும் முன்பே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் கொடுத்த "வாக்குறுதி"
சண்டிகர்: முதலமைச்சரானால் அதை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டேன் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் என ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்புகள்
கடந்த 7ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவரத்துவங்கின. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை பெறும் என்றும், கோவா மற்றும் உத்தரகாண்டில் தொங்கு சட்டசபை அமையும் என தெரியவந்துள்ளது.

பஞ்சாப்
இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு குறித்து பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''என்னைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் என்றால் காமன்மேன் என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது. உயர் பதவி கிடைத்தாலும் அதில் நீடிப்பேன்.

மக்கள்
புகழ் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும். நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல. மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். நாங்கள் பஞ்சாபை மீண்டும் பஞ்சாப்பாக ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது பிற கட்சிகளின் கனவு. அவர்கள் தோற்றுப் போகிறார்கள'' என்றார்.

பகவந்த் மான்
சங்ரூர் மக்களைவை உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுல் ஒருவர். தற்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பஞ்சாப் மக்களிடையே நல்ல அறிமுகம் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications