பஞ்சாப்: பெரும் பாதுகாப்பு குளறுபடி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட மோடி கார்! சுற்றி குவிந்த எஸ்பிஜி படை
சண்டிகர்: பஞ்சாப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக நடைபெற்ற போரட்டம் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

போராட்டக்காரர்களால் பிரதமரின் கார் பாலம் ஒன்றில் 20 நிமிடம் முடங்கியது . பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார்.
இதற்காக பதிண்டா விமான நிலையத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து சென்றார். பஞ்சாப்பில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரின் இந்த பயணம் முக்கியமானதாக கருதப்பட்டது.

ரத்து
ஆனால் கடைசி நேரத்தில் பாதுகாப்பு குறைபாடுகளால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடி இன்று காலை பதிண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா என்று பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு செல்லும் திட்டம் போடப்பட்டு இருந்தது.

மோசமான வானிலை
ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. 20 நிமிடம் காத்து இருந்தும் வானிலை சரியாகவில்லை. இதனால் கடைசி வரை ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை. இதையடுத்து காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது. காரில் செல்ல 2 மணி நேரம் ஆகும். இதையடுத்து உடனடியாக பஞ்சாப் டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோடி எஸ்பிஜி
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த சாலை முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் இருந்து 30 கிமீ தூரம் முன்பு இருந்த போது பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. பாலத்திற்கு கீழ் இன்னொரு பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இது விவசாயிகள் போராட்டம் என்று கூறப்படுகிறது.

போராட்டம்
ஆனால் யார் நடத்திய போராட்டம் என்பது உறுதி செய்யப்படவில்லை. போராட்டக்காரர்கள் எங்கு நகராமல் அங்கேயே போராடிக்கொண்டு இருந்ததால் பிரதமர் மோடியின் கார் அங்கேயே முடங்கியது. 20 நிமிடமாக கார் அங்கேயே முடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். சுற்றி கார்கள் நிறுத்தப்பட்டு பிரதமர் மோடியின் தனி வாகனம் காக்கப்பட்டது.

மோடி பஞ்சாப் கூட்டம் ரத்து
இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் காரை சுற்றி எஸ்பிஜி படையினர் ஆயுதம் ஏந்தி பாதுகாத்துக்கொண்டு இருந்தனர். கடைசியில் போராட்டம் 40 மணி நேரமாக நீடித்தது. இதனால் பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சிக்கு செல்வது ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வது பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதமர் மோடியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications