ஹரியானாவில் பாஜகவுக்கு வந்த சோதனையை பாருங்க.. சீட் மறுக்கப்பட்டதால் கட்சி மாறிய முக்கிய தலைகள்!
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில பாஜகவில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக பாஜகவிலிருந்து பல தலைவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகள் அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு இங்கு பலத்த அடி விழுந்தது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், மக்கள் மத்தியில் இயல்பாகவே அதிருப்தி இருக்கிறது. இதையெல்லாம் மீறி கட்சி எப்படி வெற்றிப்பெறபோகிறது? என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அம்மாநில பாஜகவுக்குள் வெடித்து கிளம்பியிருக்கும் சலசலப்புகள் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளன.
முதல் பஞ்சாயத்து செப்.4ம் தேதி வெடித்தது. அன்றுதான் பாஜக தனது முதல் வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில், சிட்டிங் எம்எல்ஏக்களுக்கே வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்தை மாநில அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா, மத்திய இணையமைச்சர் பிஷம்பர் சிங் பால்மிகி ஆகியோர் பாஜகவிலிருந்து கழன்றுக்கொண்டனர். அதேபோல கரன் தேவ் கம்போஜ், எம்எல்ஏ லட்மண் நாபா ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துக்கொண்டனர்.
இதனைடுத்து சமீபத்தில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில், 21 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதிலும், முக்கியமானவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் குருக்ஷேத்ரா எம்பி நவீன் ஜிண்டாலின் தாயும், இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவருமான சாவித்ரி ஜிண்டாலுக்கு பாஜக சீட் மறுத்திருந்தது. எனவே, சாவித்ரி ஜிண்டால் ஹிசாரில் இருந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஹரியானாவில் பாஜக எம்எல்ஏக்களில் 33% பேருக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிலர் தாவியுள்ளனர். பலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications