சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் அச்சுறுத்தல் - பொதுத்தேர்வுகள், தினசரி வகுப்புகள் நடைபெறுமா? - அன்பில் மகேஷ் சொல்வதென்ன

ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் 25ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் ஜனவரி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஜூன் மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைனில் பாடங்களை கற்று வந்தனர்.

8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழ்நாட்டை கவலைப்பட வைக்கும்8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழ்நாட்டை கவலைப்பட வைக்கும்

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி 72 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஓமிக்ரான்

தமிழகத்தில் ஓமிக்ரான்

தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாகத் தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணகாணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அச்சம்

பெற்றோர்கள் அச்சம்

மாணவர்களின் கற்றல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வகுப்புகள் இயங்கும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் நுழைந்துள்ள ஓமிக்ரான் தொற்று தீவிரமடையும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
ஓமிக்ரான் அச்சுறுத்தல் தீவிரமாவதால் பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் டிச.25ம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி வரும் டிசம்பர் 25ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று ஒருவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் தினசரி வகுப்புகள் நடத்துவது பற்றி முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஓமைக்ரான் தாக்கம் எதிரொலி: வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
    தினசரி வகுப்புகள்

    தினசரி வகுப்புகள்

    டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புதிய வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளதால் பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனைக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனவரி 3 முதல் சுழற்சி முறை இன்றி தினமும் வகுப்புகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 25ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Anbil Mahesh said the decision on conducting daily classes in schools due to the Omigron threat would be taken on the 25th. Minister Anbil Mahesh has said that the general examination for Class X and XII will be held strictly and the diversion examination will be held from January.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X