புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்
சென்னை: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதேபோல, புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை ஒப்புதலுடன் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அப்போது துணை நிலை ஆளுநருக்கும் புதுவை அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில் புதுவை அரசு அனுப்பி வைத்த இந்த தீர்மானத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். இதனால், அது கிடப்பில் இருந்தது. இந்த நிலையில், புதுவையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி ரங்கசாமி முதல்வர் ஆனார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள என்.ஆர் ரங்கசாமிக்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக புதுவை துணை நிலை அளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ரங்கசாமியை கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில், 10 சதவித இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications