ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
சென்னை: டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலி ஏற்பட்டு துடி துடித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திரவ நைட்ரஜன் மூலம், தயாரிக்கப்படும் smoke biscuit-கள் உயிருக்கு ஆபத்தானவை எனவும், அதீத குளிர் காரணமாக சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும் என்பதால், திரவ நைட்ரஜன்களை உணவுப் பொருட்களோடு பயன்படுத்தக்கூடாது எனவும் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வுக் கூடங்களில் பொருட்களை மிகவும் குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அறை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது. இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள், சிறுவர்களை கவர்வதற்காக ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர்.
பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கு இடங்களில், smoking biscuit-ஐ வாங்கிக் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது. திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களில் படும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியானது.
திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேசும் திறன் பறிபோகும் ஆபத்து உள்ளது, உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை யாரும் விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு விடுதிகளில் டிரை ஐஸை உணவுப்பொருளுடன் விற்கக்கூடாது. இந்த உத்தரவை மீறி யாரேனும் பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையில் கடைகளில் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications