சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1000 புதிய பேருந்துகள் கொள்முதல்! 1000 பழைய பேருந்துகள் புதுப்பிப்பு! இனி சும்மா ஜம்முன்னு போகலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் ஓட்டையும் ஒடிசலுமாக பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் தான் பயணிகளின் வசதி கருதி புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

இது தொடர்பான விவரம் வருமாறு;

தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது? தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது?

110 விதியின் கீழ்

110 விதியின் கீழ்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும் மற்றும் 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திடவும் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தினந்தோறும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், கோவிட் பெருந்தொற்றின் போது பெருமளவில் பாதிக்கப்பட்டன.

1 கோடியே 70 லட்சம்

1 கோடியே 70 லட்சம்

பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை 2020-2021 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 70 இலட்சமாக குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு, பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பேருந்து சேவைகள் சீராக்கப்பட்ட பின்பு இது நாளொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் பயணிகளாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

அரசுப் பேருந்துகள்

அரசுப் பேருந்துகள்

மேலும், ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாக இருப்பதால், தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் மிகச்சிறந்த திட்டமான இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும் மற்றும் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டில் முதன்மையான நிலைக்கு

நாட்டில் முதன்மையான நிலைக்கு

ரூ.130 கோடி மதிப்பீட்டில் அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை புதுப்பித்திட அரசின் நிதியாக ரூ.80 கோடியும் எஞ்சிய ரூ.50 கோடியினை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களே ஏற்கவும் அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும், ரூ.420 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
An order has been issued to purchase 1000 new buses and refurbish 1000 old buses in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X