சென்னை பல்கலை.யில்.. பட்டப்படிப்பில் சேராமலேயே பட்டம் பெற முயற்சி.. சிக்கிய 117 பேர்..என்ன நடந்தது?
சென்னை: பொதுவாக தேர்வு எழுதும்போது சிலர் முறைகேட்டில் சிக்கி மாட்டிக் கொள்வது. தேர்வு கூடத்தில் பிட் வைத்து எழுதுவது, நண்பர்களிடத்தில் வினாத்தாள்களை பரிமாறிக் கொள்வது என பல்வேறு முறைகேடான விஷயங்கள் நடக்கும்.
ஆனால் படிக்காமலேயே பட்டம் பெற முயற்சித்த சிலர் கையும், களவுமாக சிக்கியுள்ளனர். இது வேறு மாநிலத்திலும் இல்லை. நம்ம தமிழ்நாட்டில்தான் இந்த அவலம் நடந்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்
பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. அதாவது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 -ம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020-ம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வசமாக சிக்கிய 117 பேர்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி117 பேர் எந்த பட்டப்படிப்பிலும் படிக்காமலேயே இந்த ஆன்லைன் தேர்வு எழுதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் இந்த மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளது என்பதுதான் இதில் அதிர வைக்கும் விஷயமாகும். தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் ஒவ்வொருவரிடம்மும் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியுள்ளது.

தேர்வு முடிவுகள் ரத்து
இந்த மோசடிகளை சென்னைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து 117 பேரையும் கையும், களவுமாக பிடித்துள்ளது. இதனையடுத்து எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு?
மேலும், இந்த மோசடி குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளார். வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க அந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் முக்கிய புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தவிர சென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். விசாரணை குழுவின் விசாரணை போக போகத்தான் இதில் தொடர்புடைய அனைவரும் வெளிச்சத்துக்கு வருவார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications