சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1,171 ஆசிரியர்களின் பணிக்கு “ஆபத்து”.. பள்ளிக்கல்வித்துறை திட்டம்! தேர்வில் பாஸ் ஆகாததால் சிக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 1,747 அரசுப் பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் இந்த டெட் எனப்படும் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே ஆசிரியராக முடிவு.

கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

துபாயில் இருந்து பறந்து வந்த தேவா! காத்திருந்தவருக்கு காதலி கொடுத்த ஷாக்! தீபாவளி அதுவுமா இப்படியா? துபாயில் இருந்து பறந்து வந்த தேவா! காத்திருந்தவருக்கு காதலி கொடுத்த ஷாக்! தீபாவளி அதுவுமா இப்படியா?

டெட் தேர்வு

டெட் தேர்வு

தமிழ்நாடு அரசு TNTET எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி அடைந்தால் இடைநிலை ஆசிரியராக பணிபுரியலாம். 2 வது தாளில் தேர்ச்சிபெற்றால் பட்டதாரி ஆசிரியராக முடியும். இதனால் புதிதாக பணியில் சேர்பவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே ஆசிரியராக இருப்பவர்களும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கால அவகாசம்

கால அவகாசம்

பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் அரசால் வழங்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டும் டெட் தேர்வெழுத அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பணி நீக்கமா?

பணி நீக்கமா?

அதே நேரம் மற்ற ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற பல முறை அரசு காலக்கெடுவை நீடித்து வந்தது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் 1,717 ஆசிரியர்கள் டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி அடையாமலேயே இருக்கும். இந்த நிலையில் இந்த 1,717 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்து இருக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காகர்லா உஷா, "அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 1,717 பேர் இன்னும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து பணியில் நீடித்து வைத்திருக்க இயலாது. அந்த ஆசிரியர்களை நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணியிலிருந்து நீக்கம் செய்வது பற்றி ஆலோசிக்கப்படும்." என்றார்.

English summary
It is heared that Tamil Nadu School Education Department has planned to fire 1,747 government school teachers who have not passed the teacher's qualification test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X