பிளஸ் 1 பொதுத் தேர்வு நடக்குமா?.. மாணவர்களே..அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது இதுதான்
சென்னை: மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்பத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுமைகளைக் குறைக்கும் விதமாகவும், 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இந்த கருத்தை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும்.
பொதுவாக தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கவேண்டும். தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்றுவிடுகிறார்கள்.
11ஆம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக்கொள்வார்கள். அதனை கருத்தில்கொண்டு தான் இந்த 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசு அலுவலர்களுக்கு, அகவிலைப்படி விகிதம் 34சதவிகிதம் அளவு உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications