சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக, அதிமுக.. எந்தக் கட்சியில் கிரிமினல் வேட்பாளர்கள் அதிகம் தெரியுமா.. ஷாக் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் திமுகவில் தான் அதிகமாக இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பின் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்துள்ளது. திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர் மீது அறிவிக்கப்பட்ட குற்றசாட்டுகள் இருப்பதாகவும், 50 பேர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த விபரம் கணக்கிடப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியல் கட்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

13 சதவீதம் பேர் குற்றவாளிகள்

13 சதவீதம் பேர் குற்றவாளிகள்

வேட்பாளர்களில் 90 சதவீதம் பேரின் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்த போது 13 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள், 18 சதவீதம் பேர் பணக்கார வேட்பாளர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களில் 6 சதவீதம் பேர் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பதிவேற்றமில்லாத இல்லாத வேட்பாளர்கள்

பதிவேற்றமில்லாத இல்லாத வேட்பாளர்கள்

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏறக்குறைய 90 சதவீதம் வேட்பாளர்களின் பிரமாண பத்திர விபரம் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக 10, நாம் தமிழர் கட்சி 30, மக்கள் நீதி மய்யம் 23, அமமுக 59 பேரின் பிரமாண பத்திரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

முதலிடத்தில் திமுக கூட்டணி

முதலிடத்தில் திமுக கூட்டணி

மொத்தம் 466 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். இவர்களில் சுமார் 350 பேர் முக்கிய கட்சிகளை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக திமுக கூட்டணியில் 136 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். திமுக வேட்பாளர்களில் 76% வேட்பாளர்கள் குற்ற பின்னணியுடன் இருப்பதாகவும் அதில் 26% வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திமுக, பாஜக தான் அதிகம்

திமுக, பாஜக தான் அதிகம்

இதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக உள்ளது. திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 178 வேட்பாளர்களில் 136 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள். பாஜக வேட்பாளர்கள் 20 பேரில் 15 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். திமுக வேட்பாளர்களில் 50 பேரும், பாஜக.,வில் 8 பேர் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

 அப்போ அதிமுக.,வில்

அப்போ அதிமுக.,வில்

மாநிலத்திலேயே குற்ற பின்னணி கொண்ட குறைந்த அளவு வேட்பாளர்களை கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 18 பேர் கடுமையான குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

மற்ற கட்சிகளின் விபரம்

மற்ற கட்சிகளின் விபரம்

காங்கிரசில் 71 சதவீதம் பேரும், பாமக.,வில் 44 சதவீதம் பேரும், தேமுதிக 30 சதவீதம், அமமுக 29 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யம் 15 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி 14 சதவீதம் பேரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.

 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

சொத்து மதிப்புகளை பொறுத்தவரை, திமுகவின் 178 வேட்பாளர்களில் 155 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்களின் 19 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர். தமிழகத்தில் அதிக கோடீஸ்வர வேட்பாளர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் பணக்கார வேட்பாளர்கள். இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களிலும் குறைந்த பட்ச சொத்து மதிப்பு ரூ.1.72 கோடி ஆகும்.

English summary
Association for Democratic Reforms (ADR) has shown that 13% of the candidates in Tamil Nadu Assembly election have criminal cases pending against them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X