துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா உறுதி.. பிஎப் 7 வேரியண்ட்டா என சோதனை
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருடன் பயணித்த அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை இலங்கையிலிருந்து 70 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பிரதீபா (39), அவரது 6 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இலந்தைகுளம் பகுதி
இதையடுத்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருவருடன் பயணித்த மற்ற பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அது போல் இலந்தைகுளம் கிராமத்திலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பிஎப் 7 வகை
இவர்கள் இருவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை. இவர்களுக்கு பிஎப் 7 வகை பாதிப்பா என்பதை கண்டறிய அவர்களுடைய மாதிரிகள் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 6 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

துபாயிலிருந்து
இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனாவா இல்லையா என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அவர்களுடைய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இருவரும் தொற்று உறுதியானதால் அவர்களுடன் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரேண்டம் முறை பரிசோதனை
மேற்கண்ட இருவருக்கும் ரேண்டம் முறையில் சோதனை நிகழ்த்தப்பட்டது. இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருடன் சேர்ந்து கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிஎப் 7 கொரோனா தொற்று உறுதியாகவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications