சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் பயிலரங்கம்! 2 நாட்களாக பாடம் எடுத்த முக்கியப் பிரமுகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற 2 நாள் அரசியல் பயிலரங்கத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலர் கட்சி நிர்வாகிகளுக்கு பாடம் எடுத்தனர்.

பீட்டர் அல்போன்ஸ், ஜெகத் கஸ்பார், திரு முருகன் காந்தி, தனியரசு, என முக்கியப் பிரமுகர்கள் பலர் தமிமுன் அன்சாரியின் அழைப்பை ஏற்று அந்த பயிலரங்கத்தில் பேசினர்.

கட்சியை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள தமிமுன் அன்சாரி, இப்போது சுற்றுப்பயணங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்.

ராமஜெயம் வழக்கு.. 10 ஆண்டுகளுக்கு துப்பு துலங்குகிறது.. உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்! ராமஜெயம் வழக்கு.. 10 ஆண்டுகளுக்கு துப்பு துலங்குகிறது.. உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்!

பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில அளவிலான இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை - கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், ஃபாஸிச சக்திகளை எதிர்கொள்ளும் ஜனநாயக முறைகள், வலைதள பதிவுகளில் கவனம், உள்ளிட்டவைகள் பற்றி பேசினார்.

மதிய உணவு

மதிய உணவு

பீட்டர் அல்போன்ஸை தொடர்ந்து பேசிய கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அரசியலில் சமூக நீதியாளர்களின் பங்களிப்பு என்ன?, மதவாத சக்திகளை ஜனநாயக வழியில் முறியடிப்பது எப்படி? ஆகிய விவகாரங்கள் பற்றி பேசினார். அதைத் தொடர்ந்து மஜக நிர்வாகிகளுக்கு வாழை இலை போடப்பட்டு பிரியாணி உணவு பரிமாறப்பட்டது. நிர்வாகிகளோடு சேர்ந்து தமிமுன் அன்சாரியும் தரையில் அமர்ந்தவாறே மதிய உணவு சாப்பிட்டார்.

திரு முருகன் காந்தி

திரு முருகன் காந்தி

இரண்டாம் நாள் அரசியல் பயிலரங்கில் பேசிய திருமுருகன் காந்தி, தமிழர் ஒற்றுமை, ஈழ விவகாரத்தில் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்படுத்த வேண்டிய இணக்கப்பாடுகள், கொள்கை அரசியலை முன்னெடுத்தல் குறித்து வகுப்பெடுத்தார். அவரைத் தொடர்ந்து பேசிய ஜெகத் கஸ்பார், கல்வி மேம்பாட்டின் அவசியம குறித்து அக்கறை பொங்க விளக்கினார். அதே போல் நம்மை சுற்றி நிகழும் விவகாரங்களை எவ்வாறு புரிந்துக் கொள்வது? பலவீனங்களை பலமாக மாற்றுவது எப்படி? என்ற கருத்தியலில் வகுப்பெடுத்தார்.

விளையாட்டுப் போட்டி

விளையாட்டுப் போட்டி

மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டு நாள் அரசியல் பயிலரங்கு வகுப்புகள், கலந்துரையாடல், கேள்வி - பதில், குழு விவாதம், குறும் படங்கள் ஒளிபரப்பு, விளையாட்டு நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி என பன்முக சூழலோடு நிர்வாகிகள் மனம் மகிழும் வகையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
In a 2-day political workshop held in Chennai on behalf of the Manithaneya jananayaga katchi, many important personalities took lessons to the party executives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X