மும்பையிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்.. ஆனால், அத்தனையும் தனியாருக்கு!
சென்னை: தமிழகத்திற்கு 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு சென்றன.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தளா்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழக அரசு தீவிரம்
அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள்,மாற்றுதிரனாளிகளுக்கு அவா்கள் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.

தேவையான தடுப்பூசி இல்லை
இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது.

தனியார் கொள்முதல்
இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் தனியாா் மருத்துவ நிறுவனங்கள் தனியாரிடமிருந்து தடுப்பூசி கொள்முதல்களை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே, மருந்து நிறுவனங்கள் தனியாருக்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. தமிழக அரசுக்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசிகள் வரவில்லை.

விமானத்தில் வருகை
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன. 18 பாா்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை தனியாா் மருத்துவமனை எஜென்சிகளிடம் ஒப்படைத்தனா்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications