• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஏழைத்தாயின் மகன் முதல் யார் அந்த 7 பேர் வரை.. 2018ல் வைரல் ஹிட் அடித்த சில வசனங்கள் என்ன தெரியுமா?

|

சென்னை: 2018 வருடம் முழுக்க சில புது புது வசனங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் சில வசனங்கள் பெரிய மாஸ் வைரல் ஆனது.

2018ல் பல முக்கியமான விஷயங்கள் நடந்தது. பல தேர்தல்கள், பல மோதல்கள், சில வழக்குகள் என்று நிறைய மாற்றங்கள் இந்த வருடம் நடந்தது.

இதில் எல்லாம் தொடர்புடைய சில வசனங்களும் பெரிய ஹிட் அடித்தது. இதில் பல வசனங்கள் அதை சொன்னவர்களுக்கு பெரிய பிரச்சனையை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது.

[2018 பிளாஷ் பேக்]

நான் ஏழைத்தாயின் மகன் மோடி

நான் ஏழைத்தாயின் மகன் மோடி

பிரதமர் மோடி, இந்த வருடம் முழுக்க அதிகம் பயன்படுத்திய வார்த்தை இதுதான். சென்ற இடம் எல்லாம் நான் ஏழைத்தாயின் மகன் என்று கூறி அனுதாபம் தேட முயன்றார். ராகுல் காந்தி குடும்ப அரசியல் செய்கிறார் என்று விமர்சனம் வைக்கும் சமயங்களில் எல்லாம் மோடி தவறாமல் நான் ஏழைத்தாயின் மகன் என்று கூறினார்.

தமிழிசையின் இது வெற்றிகரமான தோல்வி

தமிழிசையின் இது வெற்றிகரமான தோல்வி

இந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டுபிடித்த இது வெற்றிகரமான தோல்வி என்பதாகத்தான் இருக்கும். 5 மாநில தேர்தல் தோல்வியை சமாளிக்க பாஜகவினர் எல்லோரும் கஷ்டப்பட்ட நேரத்தில் அசலாட்டாக இந்த வார்த்தையை கண்டுபிடித்தார் தமிழிசை. மக்களே இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் கஷ்டமான நேரத்தில் சொல்லி பார்க்கலாம்.. எங்கே சொல்லுங்கள் இது வெற்றிகரமான தோல்வி!

அது என்னோட அட்மின்

அது என்னோட அட்மின்

அது என்னோட அட்மின் - இந்த வசனத்தை யார் சொன்னது என்று கேட்டால் சின்ன குழந்தை கூட எளிதாக சொல்லிவிடும். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் குறித்து தனது பேஸ்புக் போஸ்ட்டில் தவறாக போஸ்ட் செய்துவிட்டு, பின் அதை எல்லாம் நான் சொல்லல என் அட்மீன் சொன்னது என்று எஸ்கேப் ஆனார். இப்போதுவரை பலருக்கும் அந்த எச்.ராஜாவின் அட்மீன் யார்?என்று தெரியவே தெரியவே.. அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஹைகோர்ட்டாவது #$@@

ஹைகோர்ட்டாவது #$@@

அதேபோல் எச்.ராஜா புதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தெருவுக்குள் செல்ல அனுமதி கேட்க, அதற்கு போலீஸ் மறுக்க கோபம் அடைந்த எச்.ராஜா வெகுண்டெழுந்து ''ஹைகோர்ட்டாவது @#$%'' என்று கெட்ட வார்த்தையில் திட்டி மாட்டிக்கொண்டார். அதே கோவத்தோடு போய் கோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டது வேறு கதை!

சே-வும் ஃபிடலும் போல

சே-வும் ஃபிடலும் போல

இந்த வருடத்தின் சிறந்த புனைபெயர் என்றால் அது சேகுவாராவும் பிடல் காஸ்ட்ரோவும்தான் என்று சொல்ல வேண்டும். முதல்வர் பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுகவினர் வைத்த பெயர்தான் சேகுவாரா - பிடல் காஸ்ட்ரோ. அட அட.. இதுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என்ற அளவிற்கு அதிமுகவினர் இந்த வசனத்தை வைத்து ஒட்டிய போஸ்டர்களும், கட் அவுட்களும் தஞ்சாவூர் கல்வெட்டிற்கு அடுத்து அதிக பிரபலம் கொண்டதாகும்.

யார் அந்த 7 பேர்

யார் அந்த 7 பேர்

யார் அந்த 7 பேர் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கேட்டதுதான் இந்த வருடத்தின் டாப் கேள்வி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேர் குறித்து கேள்விக்கு ரஜினி கேட்ட பதில் கேள்விதான் ''யார் அந்த 7 பேர்?''. அதன்பின் இரவோடு இரவாக முழு டிரெய்னிங் எடுத்துவிட்டு மறுநாளே 7 பேர் குறித்து தெளிவாக ஒப்பித்தார். ஆனால் 10 பேரை சேர்ந்து ஒருவர் எதிர்த்தால் யார் பலசாலி என்று செய்தியாளர்களை குழப்பிவிட்டு சென்றார்.

நீங்க யார் ரஜினியா?

நீங்க யார் ரஜினியா?

அதேபோல் யார் அந்த 7 பேர் என்ற கேட்ட ரஜினியையே பார்த்து நீங்க யார் என்று கேட்ட சம்பவமும் இந்த வருடம் நடந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அடிபட்டு க் கிடந்த மக்களை சந்திக்க ரஜினி மருத்துவமனைக்கு சென்றார். அவரை பார்த்து கோபம் அடைந்த இளைஞர் ஒருவர், யார் நீங்க? என்று கேள்வி கேட்க.. ரஜினிக்கு இன்னொரு முறை ''தலை சுத்திடுச்சு'' பாஸ்!

புதுச்சேரிக்கோ வனக்கோம் மோடி

புதுச்சேரிக்கோ வனக்கோம் மோடி

எப்போதும் தமிழ்நாட்டுக்கோ வனக்கோம் சொல்லும் மோடி, புதுச்சேரிக்கு வணக்கும் சொல்லும் விதமாக பாஜகவினர் உடன் நடந்த விவாதத்தில் புதுச்சேரிக்கோ வனக்கோம் என்று கூறினார். ஆனால் மோடியிடம் கேள்வி கேட்ட புதுச்சேரி பாஜக நிர்வாகி, பாஜகவிற்கு எதிராக கேள்வி கேட்க அது பெரிய வைரலானது. அந்த ஒரு பேட்டிக்குபின் இப்போதெல்லாம் கேள்வியை முன்னாடியே சொன்னாதான் பதில் சொல்வேன் என்று மோடியே தீர்மானமாக சொல்லிவிட்டாராம்!

சர்தாரின் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி

சர்தாரின் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி

குஜராத்தில் திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை பெரிய வைரல் ஆனது. ஆனால் பாவம் டிரெண்ட் ஆனது என்னவோ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டிதான். அந்த சிலைக்கு அருகே எழுதப்பட்டு இருந்த ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்ற statue of unity என்பதன் தவறான தமிழாக்கம் பெரிய பிரச்சனையாகி, டிரெண்டாகி, கடைசியில் வெள்ளை மை வைத்து அழிக்கும் நிலைக்கு சென்றது.

பாசிச பாஜக ஒழிக

பாசிச பாஜக ஒழிக

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமானத்தில் செல்லும் போது அவருடன் சென்ற தூத்துக்குடி பெண் சோபியா சொன்ன வாக்கியம்தான் இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் வாக்கியம். தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சோபியா கூற, கோபம் கொண்ட தமிழிசை சண்டை போட, பின் கேஸ் போட, பாசிச பாஜக ஒழிக உலக வைரல் ஆக என்று மூன்று நாட்களுக்கு டிரெண்டிலேயே இருந்தது சோபியாவின் குரல்!

கோ பேக் மோடி வைரல்

கோ பேக் மோடி வைரல்

ஆனால், ஆனால் இந்த வருடம் ஹிட் அடித்ததில் டாப் எது என்றால் கண்டிப்பாக அது கோ பேக் மோடியாகத்தான் இருக்கும். தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்பு கொடி காட்ட நெட்டிசன்கள் உருவாக்கிய டேக்தான் கோ பேக் மோடி. யாருமே எதிர்பார்க்காத வகையில் கோ பேக் மோடி உலகம் முழுக்க வைரலாக, வடஇந்தியாவே ''யார்ரா இவங்க எல்லாம்'' என்று தமிழர்களை திரும்பி பார்த்தனர். வானத்தில் பறந்த மோடிக்கு கருப்பு பலூன் பறக்க விட்டதெல்லாம் வேறுலெவல் அலும்பு!

 
 
 
English summary
2018 Year Ender : Viral dialogues and phrases of this year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more