சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020 பிளாஷ் பேக்: இந்த ஆண்டில் நிகழ்ந்த சூரிய, சந்திர கிரகணங்கள் - பாதிப்புகள்

கிரகணங்கள் அறிவியல் ரீதியாக வானத்தில் நிகழும் அதிசயங்கள். அமாவாசை நாளில் சூரிய கிரகணமும், பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் நிகழ்கின்றனர். 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த சூரிய சந்திர கிரகணங்களப் பற்றி பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: நிலா எப்போதுமே பால் போல வெள்ளையாகவே இருக்கும். சின்னச் சின்ன கறைகள் இருந்தாலும் அதுவும் அழகுதான். ஆனால் சூரியன் உதயத்தின் போது ஆரஞ்சு பழமாக மாறி பின்னர் மஞ்சள் நிறமாக சுட்டெரிக்கும். மாலையில் ஆரஞ்சாகவும், சிவப்பாகவும் மாறும். கிரகண காலங்களில் நிலவும், சூரியனும் கருமையாக மாறும். 2020ஆம் ஆண்டில் உலக அளவில் 2 சூரிய கிரகணங்கள், நான்கு சந்திர நிகழ்ந்தாலும் இந்தியாவில் ஒரே ஒரு சூரிய கிரகணம் மட்டுமே தெளிவாக தென்பட்டது.

2020ஆம் ஆண்டில் மொத்தம் 2 சூரிய கிரகணமும் 4 சந்திரகிரகணமும் நிகழ உள்ளதாக கடந்த ஆண்டே நாசா அறிவித்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சந்திரகிரகணம் சிவப்பு நிலவாகவும், நீல நிலவாகவும் தெரிந்தது. இந்த ஆண்டு சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் அதாவது புறநிழல் நிலவு மறைப்பு சந்திரகிரகணம் ஆக நிகழ்ந்தது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருட்டாக மாறாது அல்லது சிவப்பாகவும் மாறாது.

2020ஆம் ஆண்டில் நான்கு பெனம்பிரல் சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. இந்த கிரகணங்கள் இந்தியாவில் தெரியவில்லை. சந்திர கிரகணத்தை ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவின் சில நாடுகளிலும், ஆப்ரிக்கா, வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் வசிப்பவர்கள் பார்த்து ரசித்தனர்.

முதல் சந்திர கிரகணம்

முதல் சந்திர கிரகணம்

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த ஓநாய் சந்திர கிரகணம் ராகு கிரகஸ்த சந்திரகிரகணமாக நிகழ்ந்தது. ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்தில் தொடங்கி 11ஆம் தேதி அதிகாலை 2.42 மணிக்கு முடிந்தது.

இந்தியாவில் தெரியாத கிரகணங்கள்

இந்தியாவில் தெரியாத கிரகணங்கள்

ஜூன் 5 ஆம் தேதி நிழல் போன்ற கிரகணமாக சந்திர கிரகணம் நிகழ்ந்தது தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் சில நாடுகளில் வசிப்பவர்கள் பார்த்தனர். ஜூலை 5 ஆம் தேதியன்று நிழல் போன்ற தெளிவற்ற கிரகணம் தென்பட்டது. இதை வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள நாட்டு மக்கள் மட்டுமே பார்த்தனர்.

கடைசி சந்திர கிரகணம்

கடைசி சந்திர கிரகணம்

நவம்பர் 30 ஆம் தேதியன்று 2020ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கு முடிவடைந்தது. பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த சந்திர கிரகணத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் மட்டுமே தெரிந்தது.

முதல் சூரிய கிரகணம்

முதல் சூரிய கிரகணம்

கடந்த ஜூன் 21ஆம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெளிவாக தெரிந்தது. இது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஆகும். 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தியது. இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும்.

முழு சூரிய கிரகணம்

முழு சூரிய கிரகணம்

இந்த ஆண்டில் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை நிகழ்கிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் நம்மால் தெளிவாக காண முடியாது. தென்அமெரிக்க நாடுகளில், சிலி, அர்ஜென்டையா, ஆப்ரிக்காவிலும், தென்மேற்கு ஆப்ரிக்காவிலும் தெளிவாக காண முடியும்.

கிரகணங்களினால் பாதிப்புகள்

கிரகணங்களினால் பாதிப்புகள்

கடந்த 2019ஆம் ஆண்டு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் இணைந்திருந்த போது நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா கொள்ளை நோய் உலக மக்களில் பல லட்சம் பேரின் உயிரை காவு வாங்கியது. அந்த நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க பல நாட்டு ஆய்வாளர்களும் போராடி வருகின்றனர். இந்த ஆண்டு நிகழ்ந்த கிரகணங்களினால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

English summary
Flash back 2020, year ender 2020, During eclipses, the sun becomes darker. By 2020, there will be 2 solar eclipses worldwide, four lunar eclipses but only one solar eclipse in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X