சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21.. 18.. முடிஞ்சு போச்சு போல.. முதல்ல பாஜக, அடுத்து பாமக, நடுவுல டிடிவி.. திமுகவை நோட்பண்ணும் அதிமுக

திமுகவின் கூட்டணியை பொறுத்துதான், அதிமுகவின் கூட்டணி அமையும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாலும், திமுகவின் கூட்டணியே, அதிமுகவின் மெகா கூட்டணியை தீர்மானிக்கும் என்கிறார்கள்.. எப்படி?

பாஜக இந்த முறை தமிழகத்தை குறி வைத்தே தன்னுடைய தேர்தல் பிளானை நடத்தி வருகிறது.. காரணம், நம் நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது...

இதில், 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது... மற்ற மாநிலங்களில் குறிப்பாக அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான், ஆபரேஷன் தாமரை கையில் எடுக்கப்பட்டுள்ளது..

ஏன் போகல? அமித் ஷாவுக்கே போனை போட்ட எடப்பாடி.. வெற்றி சிரிப்பு சிரித்த ஓபிஎஸ்.. அது யார் தோனியா? ஏன் போகல? அமித் ஷாவுக்கே போனை போட்ட எடப்பாடி.. வெற்றி சிரிப்பு சிரித்த ஓபிஎஸ்.. அது யார் தோனியா?

 ஆபரேஷன் சவுத்

ஆபரேஷன் சவுத்

சில மாதங்களுக்கு முன்பு, அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. "அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும். அதுமட்டுமல்லாமல், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

 தாமரைகள்

தாமரைகள்

தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் என்று அமித்ஷா அறுதியிட்டு சொன்னபோதே, ஆபரேஷன் சவுத் என்ற பிளான் கையில் எடுக்கப்பட்டது. அதிமுக விவகாரம் முடிவுக்கு வராவிட்டாலும்கூட, கூட்டணி குறித்த பேச்சுக்கள் மெல்ல களத்தில் எழுந்துள்ளது.. மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாலும், கட்சிகள் என்னென்ன என்று வெளிப்படையாக சொல்லவில்லை.. ஆனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அதிமுக - பாஜக தரப்பிடையே, ஓரளவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது..

 ஷேரிங் சீட்

ஷேரிங் சீட்

அதாவது, 13 சீட்கள் பாஜகவுக்கும், 26 சீட்டுகள் அதிமுகவுக்கும் என முடிவானதாம்.. இதில், 13 சீட்களை, கூட்டணிக்கு கொண்டு வரக்கூடிய கட்சிகளுடன் பாஜக பகிர்ந்து கொள்ள வேண்டும், அதேபோல, கூட்டணிக்குள் கொண்டுவர கட்சிகளுடன் அந்த 26 சீட்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கூட்டணியின் தற்சமய நிலைப்பாடாக உள்ளதாக செய்திகள் கசிந்தன. ஆனால், இந்த எண்ணிக்கை மாறுபடக்கூடும் என்கிறார்கள்.. அதாவது, திமுகவின் கூட்டணியை பொறுத்தே, அதிமுகவின் மெகா கூட்டணி முடிவாகக்கூடுமாம்..

 கமல் பிளான்

கமல் பிளான்

வழக்கமாக, நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யம், இந்த இரு கட்சிகளுமே திராவிட கட்சிகளின் ஓட்டுக்களை பிரிக்கக்கூடியவையாக உள்ளன.. ஒருபக்கம் பாஜக மீதான வெறுப்பையும், மற்றொருபக்கம் திமுக அரசு மீதான வெறுப்பையும் சேர்த்து, இந்த 2 கட்சிகளும் அறுவடை செய்வார்கள்.. இந்த முறை, திமுகவுடன் கமல் கூட்டணி வைக்கலாம் என்ற சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இது உண்மையானால், அது திமுகவுக்கே மேலும் பலத்தை சேர்த்துவிடும்.

 மாறும் நம்பர்

மாறும் நம்பர்

அதேபோல, பாமகவை பொறுத்தவரை, திமுகவுடனேயே இந்த முறை கூட்டணி வைக்க நினைப்பதாக தெரிகிறது.. இந்த நிமிடம்வரை திமுக இதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.. கடைசிவரை திமுகவில் கூட்டணிகதவு திறக்காத பட்சத்தில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க நேரிடலாம்.. அப்படி கூட்டணி வைத்தால், 5 சீட்டுகளையாவது பாமக கேட்டு வாங்கக்கூடும் என்றும், அந்தவகையில் பாஜகவின் சீட் எண்ணிக்கை என்பது மாறுபடும் என்று அரசியல் நோக்கர்கள் கணக்கிடுகிறார்கள்..

 15 TO 18 சீட்

15 TO 18 சீட்

இந்த லிஸ்ட்டில் டிடிவியும் இணைந்தால், சீட்டுக்கள் எண்ணிக்கை மேலும் மாறுபடவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. ஒருவேளை, பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில், பாஜக 15 முதல் 18 சீட்வரை கேட்டு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.. ஆக, திமுகவின் கூட்டணியை பொறுத்தே, எடப்பாடி சொன்ன அந்த மெகா கூட்டணி அமையும் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!

English summary
21 + 18: How many seats are likely to get BJP in AIADMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X