சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : 7,301 அரசு காலி பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி, TNPSC) குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

தமிழக அரசு துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 4 தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

22 lakh candidates to appear for TNPSC Group IV exam today

Recommended Video

    தொடங்கியது TNPSC Group 4 தேர்வு.. ஆர்வமுடன் தேர்வெழுதும் மாணவரகள் - வீடியோ
    • டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்கியது. இத்தேர்வுகள் பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
    • 10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
    • பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தது.
    • குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.
    • தேர்வர்கள் விடை குறிக்கவேண்டிய OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
    • முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு எழுத செல்லும் தேர்வர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    English summary
    22 Lakh candidates will appear for the TNPSC Group IV exam today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X