தமிழகம் முழுவதும் 291 நீதிபதிகள் அதிரடி மாற்றம்... உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உட்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
82 சீனியர் சிட்டி சிவில் நீதிபதிகள், 181 சிவில் நீதிபதிகள் என 291 பேர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி. குமரப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னையில் காலியாக உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற தலைமை நீதிபதியாக விழுப்புரம் மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

6வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக ஈரோடு கூடுதல் நீதிபதியாக இருந்த ஆனந்த், 7வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக பரமக்குடி கூடுதல் நீதிபதி அனில்குமார், 15வது கூடுதல் சிட்டி சிவில் நீதிபதியாக, சிவகங்கை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் உட்பட 27 மாவட்ட நீதிபதிகள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், சென்னையில், எழும்பூர் 2வது பெருநகர மாஜிஸ்திரேட்டாக கோபிநாத், 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பாக்கிய ஜோதி, எழும்பூர் ஏசிஎம்எம்-ஆக ரவி, 10வது சிட்டி சிவில் நீதிபதியாக அமுதா, 11வது சிட்டி சிவில் நீதிபதியாக அருள்மொழிசெல்வி, 12வது சிட்டி சிவில் நீதிபதியாக வித்யா, 6வது சிறுவழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக சுதா, 16வது சிட்டி சிவில் நீதிபதியாக மோகனா நியமிக்கப்பட்டுள்ளனர்.
18வது சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதியாக மணிமேகலை, 3வது சிட்டி சிவில் நீதிபதியாக விஜயராணி, 4வது சிட்டி சிவில் நீதிபதியாக ஆப்ரகாம் லிங்கன், 5வது சிட்டி சிவில் நீதிபதியாக அப்துல் மாலிக், 6வது சிட்டி சிவில் நீதிபதியாக சுவாமிநாதன், 7வது சிட்டி சிவில் நீதிபதியாக கணபதிசாமி, 17வது சிட்டி சிவில் நீதிபதியாக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18வது சிட்டி சிவில் நீதிபதியாக சசிகலா, 9வது சிட்டி சிவில் நீதிபதியாக பிரபாகரன், 4வது சிட்டி சிவில் நீதிபதியாக சிவகுமார் உட்பட தமிழகம் முழுவதும் 87 சீனியர் சிவில் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 181 மாஜிஸ்திரேட்கள் (சிவில் நீதிபதிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி 28 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications