சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் டிராவிட்டால் இந்திய அணி வேற லெவலுக்கு போகும்.. 3 காரணங்கள் இருக்கு.. கம்பீர் பளிச்!

Google Oneindia Tamil News

சென்னை: ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அணியின் வெற்றிக்கு உதவும் என்றும் அதற்கான மூன்று காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.

Recommended Video

    இது தான் இப்ப சிக்கல்.. Indian Team-ல் செய்ய வேண்டிய மாற்றங்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி ஓய்வு பெற்ற நிலையில் அந்த இடத்திற்கு வந்துள்ளார் ராகுல் டிராவிட்.

    இந்த நிலையில்தான் அவரது பயிற்சியின் கீழ் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    ஓபிஎஸ்ஸின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?.. அவங்கதானா?.. என்ன செய்ய போகிறார் எடப்பாடியார்?ஓபிஎஸ்ஸின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?.. அவங்கதானா?.. என்ன செய்ய போகிறார் எடப்பாடியார்?

    கவுதம் கம்பீர்

    கவுதம் கம்பீர்

    முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கௌதம் கம்பீர் பேசுகையில் சில கருத்துக்களை தெரிவித்தார். ராகுல் டிராவிட் ஒரு மிகச்சிறந்த வீரராக செயல்பட்டவர் , அதேபோன்று சிறப்பான பயிற்சியாளராகவும் அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    3 காரணங்கள்

    3 காரணங்கள்

    அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும் . நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் விளையாடியிருக்கிறார், கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் அவர் தனது பணியில் காட்டும் அர்ப்பணிப்பு நம்பமுடியாத அளவுக்கு இருக்கும், மிகவும் கடின உழைப்பாளி அவர். எனவே அவர் இந்தியாவை சிறந்த அணியாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

    ராகுல் டிராவிட் பதில்

    ராகுல் டிராவிட் பதில்

    முன்னதாக ராகுல் டிராவிட்டிடம் செய்தியாளர் சந்திப்பின்போது பயிற்சியாளர் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, சில பயிற்சி கொள்கைகள் அதே மாதிரி தான் இருக்கும், ஆனால் ஒவ்வொரு அணிக்கு எதிராக ஆடும்போதும் சில மாற்றங்கள் செய்யப்படும், இந்திய கிரிக்கெட் அணியை புரிந்துகொள்வதற்கு எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும், என்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு வீரர்களிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது எப்படி என்று பார்க்க வேண்டும். இதுதான் எனது தத்துவம் என்று கூறினார் ராகுல் டிராவிட்.

    சிறந்த பயிற்சி

    சிறந்த பயிற்சி

    ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்த அணிகளில் விளையாடியவர்கள் மிகச் சிறந்த வீரர்களாக உருவெடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், சீனியர்களை கொண்ட இந்திய அணியை இவர் நினைத்தபடியெல்லாம் மாற்ற முடியுமா, தேவையில்லாமல் ராகுல் டிராவிட் மீது அதிக அழுத்தத்தை பிறர் வைக்கிறார்களா என்பதெல்லாம் வரும் காலங்களில் தெரிய வரும்.

    English summary
    Former Indian cricket player Gautam Gambhir says Rahul Dravid will brings a lot on the table for team India and he list out three things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X