அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!
திருச்சி: திருச்சி சிறகனூரில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பெயரில் 12வது திமுக மாநில மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் உரை ஏற்றிய மு.க.ஸ்டாலின் திருச்சி உடனான திமுகவின் வரலாற்றை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
திருச்சி மாவட்டத்தின் சிறுகனூரில் "ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் மிகப் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு திமுகவின் தேர்தல் பணிகளுக்கான முக்கிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 7 லட்சம் பேர் நின்றபடி மாநாட்டை பார்வையிடும் வகையிலும் இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக திரண்டு வந்துள்ளனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் அறிவித்தார். அந்த மாநாடு தி.மு.க.விற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
மாநாட்டில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திருச்சி உடனான திமுகவின் வரலாற்றை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டார். திமுக இதுவரை நடத்தியுள்ள 11 மாநாடுகளில் 6 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளன. இப்போது 12வது மாநில மாநாடும் திருச்சியில் நடக்கிறது. திருச்சியை "தீரர்கள் கோட்டம்" என்று அண்ணா அழைத்தார்.
தலைவர் கலைஞர் அவர்கள் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து போராட்டம் நடத்தினார். தி.மு.க.வின் பல போராட்டங்களுக்கு திருச்சிதான் அடித்தளமாய் இருந்துள்ளது. இந்த திருச்சியில் தான் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டு வந்தபோது கை குழந்தையாக இருந்த தன்னை தனது தாயார் அழைத்து வந்து காட்டினார் என தொண்டர்களிடம் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications