சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என்ற யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை: ஏபிசிடி என்ற ஆங்கிலல எழுத்துக்களையும் தமிழில் அ,ஆ என உயிரெழுத்துக்களையும் ஒழுங்காக எழுதாத யுகேஜி மாணவனை அடித்து காயப்படுத்திய 3 ஆசிரியர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரவள்ளூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் யூகேஜி படிக்கும் அந்த மாணவனுக்கு கடந்த 9 ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அப்போது யுகேஜி மாணவன் ABCD மற்றும் தமிழ் எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என்பதற்காக 3 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், பள்ளியில் இருந்த சிறுவனை அவரது பெற்றோர் அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு அழைத்து செல்லும் போது சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவன் தன்னை அடித்த அடித்த ஆசிரியர்களை நினைத்து புலம்பத் தொடங்கினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. பலமுறை நடையாக நடந்து காவல்துறையினர் கைது செய்ய மறுப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் பிரின்சி, வகுப்பு ஆசிரியர் இன்டியனா வான், ஆங்கில ஆசிரியர் மோனோ பெராரா ஆகியோரை திருவிக நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர்கள் 3 பேரும் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்த, பள்ளிக் கல்வித் துறை மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications