சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள.. பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி. அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுப் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரம்.. பேரறிவாளன் வழக்கு முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை.. நடந்தது என்ன ? எழுவர் விடுதலை விவகாரம்.. பேரறிவாளன் வழக்கு முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை.. நடந்தது என்ன ?

30 days praloe granded for Rajiv Gandhi assassination convict Perarivalan on medical grounds

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி. அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உரிய விதிகளைத் தளர்த்தி, ஏ.ஜி. பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவானனுக்கு சிறை விடுப்பு வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவரது தயார் அற்புதம்மாள் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

30 days praloe granded for Rajiv Gandhi assassination convict Perarivalan on medical grounds
English summary
30 days parole for perarivalan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X