சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர்.. சலூன் கடைகளுக்கும் சலுகை.. கிராமத்து ஆண்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வர் எடப்பாடியார்

விதிகளுடன் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் சலூன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது..மாஸ்க், கையுறை அணிந்து முடி திருத்தம் செய்யவேண்டும் என்றும், கடையை தினசரி 5 முறை கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் சலூன் கடைகளை திறக்க தடை தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Recommended Video

    Lockdown 4.0| சலூன் கடைகளுக்கு அனுமதி... முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

    தமிழகத்தில் லட்சக்கணக்கான முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளனர்.. ஆனால் தொற்று காரணமாக முடி திருத்தும் தொழில் செய்ய தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இதனால் கடந்த 3 மாதங்களாகவே ஆண்களால் முடிவெட்ட முடியவில்லை.. தாடி, மீசை ட்ரிம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். ஒருசிலருக்கு வீடுகளிலேயே கட்டிங், சேவிங் செய்ய உதவி செய்யப்பட்டாலும், பலருக்கு தலைமுடி, தாடி வளர்ந்து புதர்போல காணப்பட்டது.

    அரசு வேலை ஓய்வு வயது உயர்வு.. இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பையும் தளர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடிஅரசு வேலை ஓய்வு வயது உயர்வு.. இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பையும் தளர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

    கடை வாடகை

    கடை வாடகை

    அதேசமயம், முடி திருத்தும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டனர்.. இவர்களுக்கு அரசும் எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. இதனால் குடும்பத்தை சமாளிப்பதை மட்டுமல்லாமல், கடை வாடகையை கூட இவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர்.

    சலூன் கடை

    சலூன் கடை

    நேற்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஏகப்பட்ட தளர்வுகளும், விலக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி தராமலேயே இருந்தது. தற்போது, ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது... இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:

    தளர்வுகள்

    தளர்வுகள்

    "கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    உத்தரவு

    உத்தரவு

    அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

    கிருமிநாசினி

    கிருமிநாசினி

    இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதிசெய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    4.0 lockdown: cm edapadi palanisamy allows saloons to open in rural areas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X