இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்!..முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்..இனி விலை குறையும்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் ஆழ்கடலுக்குள் சென்றால் நிச்சயம் நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை வரப்போகும் நாட்களில் குறையும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம்.

அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த காலக்கட்டத்தில் மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. மேலும் 14 மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாமல் உள்ள நிலையில் நாளையுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. இதனால் நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக மீனவர்கள் இந்த தடைக்காலத்தின் தான் படகுகளில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வது, வர்ணம் பூசுவது, வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். அதன்படி தற்போது இந்த பணிகள் நிறைவுப்பெற்று படகுகளும், வலைகளும் புதுப்பொலிவுப் பெற்றுள்ளது. இன்றும் இதற்கான பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் ஆழ்கடலுக்குள் சென்றால் நிச்சயம் நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை வரப்போகும் நாட்களில் குறையும் என கூறப்படுகிறது. 60 நாட்களுக்கும் மேலாக ஐஸ் மீன்களை சாப்பிட்டவர்கள் இனி நல்ல ப்ரஸ் ஆன மீன்களை சாப்பிடலாம்.
இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நாட்களில் விசைப்படகுகளில் ஆய்வு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் மீன்பிடி விசை படகுகளை ஆய்வு செய்த நிலையில் கடல் வளத்தை கெடுக்கும் அதிக திறன் கொண்ட குதிரை இன்ஜின்களை பயன்படுத்தினால் விசைப்படகு உரிமம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications