சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குப்புறத் தள்ளிய குதிரை...எழுவர் விடுதலை, இஸ்லாமியர்கள் விடுதலைக்கு வேட்டு: டிடிவி தினகரன் விமர்சனம்

Google Oneindia Tamil News

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் பேசிய பேச்சுக்கும் தற்போதைய நடைமுறைக்கும் சம்பந்தமில்லாமல் நடப்பதா? என டிடிவி தினகரன் ஆவேசமாக கேட்டுள்ளார்.

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடியும் முன் யார் யாரை விடுதலைச் செய்யலாம், யார் யாருக்கு தகுதி, யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றம், ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள், தீவிரவாத நடவடிக்கையால் கைதானவர்கள், குண்டுவெடிப்பு, வெஇகுண்டு வழக்கில் கைதானவர்கள் கட்டாயம் விடுதலை இல்லை என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 killed, Islamists demand release: TTV Dinakaran questions CM

எழுவர் விடுதலை கோரும் வழக்கில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதே குண்டுவெடிப்பில் ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில் தான். அதேபோல் கோவை குண்டு வெடிப்பில் கைதாகி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறிஅயில் இருப்பவர்கள் விடுதலை செய்ய கோரிக்கை வைக்கின்றனர். புதிய அரசாணையின்படி இவர் விடுதலையாகவே முடியாத நிலை. இதை டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் ஒருபேச்சு, தேர்தலுக்குப்பின் ஒரு நடைமுறையாக செயல்படுகிறார் என விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

"தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது 'குதிரை கீழே தள்ளி, குழியும் பறித்த கதையாக' அவர்கள் இனிமேல் விடுதலையாக முடியாத அளவிற்கு புதிய அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இதேபோல தாங்கள் தான் சிறுபான்மையினரின் காவலன் என்று கூறி, அந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க,

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலையையும் இந்த அரசாணையின் மூலம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிப்பாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
7 killed, Islamists demand release: TTV Dinakaran questions CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X