பள்ளிகளுக்கு கடிவாளம் போட்ட கல்வித்துறை.. "இந்த ரூல்ஸ் கட்டாயம்.." வெளியானது அதிரடி சுற்றறிக்கை
சென்னை : சென்னையில் பள்ளி வளாகத்தில் வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த நிலையில், புதுப்பிக்காத பள்ளி பேருந்துகளை இயக்க கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களுடன் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

பெரும் அதிர்ச்சி
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக இயக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேனை கவனக் குறைவாக இயக்கியதாக ஓட்டுனர் பூங்காவனம் கைது செய்யபட்டார்.

முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை
அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள்
அந்த சுற்றறிக்கையில், "மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும்,அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும். பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் முறையாக பராமரித்து உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.

கட்டாயம் பின்பற்ற வேண்டும்
மேலும், புதுப்பிக்காத பள்ளி பேருந்துகளை இயக்க கூடாது , பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் அந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும், இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. மேலும் அறிவுறுத்தல்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா ? என்பதை தீவிரமாக கண்காணிப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications