சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாமி சிலையை தொடுவது ஆகமத்துக்கு எதிரானது... அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய சிக்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: கோவில்களில் சாமி சிலையை தொடுவது ஆகமத்துக்கு எதிரானது என அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்களாகலாம் என்கிற நிலைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராக தந்தை பெரியார் முன்வைத்த கோரிக்கை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம்.. தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம்.. தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகளால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மிகப் பெரும் சட்ட போராட்டங்களுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அண்மையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து பணி ஆணை வழங்கியது.

திடீரென புதிய வாதம்

திடீரென புதிய வாதம்

ஆனாலும் ஜாதி ஆதிக்கவாதிகள், மத பழமைவாதிகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். தற்போது இந்துக்களில் ஒரு பிரிவினர்தான் சாமி சிலைகளைத் தொட்டு வழிபாடு நடத்த முடியும் என்பது ஆகமம்; ஆகவே அர்ச்சகராகிவிட்ட அனைத்து ஜாதியினருமே சாமி சிலைகளைத் தொட்டு பூஜை செய்ய முடியாது என்கிற வாதத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.

மொத்தம் 17 வழக்குகள்

மொத்தம் 17 வழக்குகள்

தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்

சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்

ஆகையால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதீன மடங்களும் இந்த வழக்குகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.அத்துடன் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர்களை கொண்டு ஒருதரப்பினர் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்கள் என்கிற அடிப்படைவாதத்தை தகர்த்து சமூக நீதி கோட்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ரங்கநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
A new controversy has erupted over Non-Brahmin priests in Tamilnadu temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X