”தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி” அமித்ஷாவின் சூடான கருத்துக்கு கூலாக பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.

Recommended Video

    Hindi இணைப்பு மொழியா? Amit Shah-வின் கருத்துக்கு கூலாக பதில் சொன்ன AR Rahman

    டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.

    அதில், "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். நிச்சயமாக இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை உயர்த்தும்.

    9 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்

    9 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்

    மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் 9 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வழக்காக இந்திக்கு மாறி இருக்கின்றனர். 8 வட மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.

    ஆங்கிலத்துக்கு பதில் இந்தி

    ஆங்கிலத்துக்கு பதில் இந்தி

    அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

    அமித்ஷாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

    அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பு என சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    ஏ.ஆர்.ரஹ்மானின் எதிர்ப்பு

    ஏ.ஆர்.ரஹ்மானின் எதிர்ப்பு

    அமித்ஷாவின் கருத்து வெளியான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழண்ணையின் படத்தை வெளியிட்டார். அந்த படம், ழகரத்தை கொண்ட கோளுடன் தமிழண்ணை வீரமாக நடனமாடும் வகையில் வரையப்பட்டுள்ளது. அதன் கீழ், தமிழணங்கு என்றும், "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரி இடம்பெற்றுள்ளது.

     தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி

    தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி

    இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அவரிடம் அமித்ஷா கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி" என கூலாக பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+