சபலம்.. பேக் அக்கவுண்டை நம்பியதால் வந்த வினை.. ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல்.. தொக்காக தூக்கிய போலீஸ்!
சென்னை: பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி பெண் போல முதியவர்களிடம் ஆசை வார்த்தையில் பேசி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் முகமது அல்டாப் (வயது 25).
திருச்சியை சேர்ந்தவரான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை முத்தையாள்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பணம் கேட்டு மிரட்டல்
இந்த புகாரில், எனது தந்தையிடம் மர்ம நபர் ஒருவர் பேஸ்புக்கில் இளம்பெண் போல பேசி பழகியுள்ளார். பின்னர் அவர் என தந்தையிடம் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படங்களை வாங்கியுள்ளார். இதன் பிறகு அவர் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து எனது தந்தைக்கு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு
அந்த நபர் 7 லட்சம் ரூபாய் உடனடியாக தர வேண்டும் என்றும் இல்லாவிடில் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். எனவே அவர் யார் என்று கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அனுப்பியுள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேஸ்புக்கில் பெண் போல மெசேஜ் அனுப்பி வந்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கினர்.

சுற்றி வளைத்து கைது
இதற்காக போலீசார் முகமது அல்டாபின் தந்தையின் பேஸ்புக்கில் இருந்து மெசேஜ் செய்து பணத்தை நேரில் தருவதாக தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முகமது அல்டாபின் தந்தையின் மூலம் பேச வைத்து மர்ம நபரை போலீசார் வரவழைத்தனர். அதன்படி குறிப்பிட்ட இடத்துக்கு வந்த அந்த ஆசாமியை மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதியவர்களிடம் நட்பு அழைப்பு கோரிக்கை
இதில், அவரது பெயர் அப்துல்லா (32) என்றும், சென்னை தியாகராய நகர் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் முதலில் தன் நண்பர்களை வெறுப்பேற்ற பேஸ்புக்கில் போலியாக பெண்ணின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்ததாகவும், நாளடைவில் இது போன்று ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஐடியா தோன்றியதாகவும் தெரிவித்தார். இதற்காக திருமணம் முடிந்த நபர்கள் மற்றும் முதியவர்களிடம் பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து அவர்களிடம் பெண் போலவே ஆசை வார்த்தை கூறி மெசேஜ் செய்வதும் பின்னர் உங்கள் புகைப்படத்தை அனுப்புமாறும், குடும்பத்தினரின் புகைப்படத்தை அனுப்புமாறும் தெரிவிப்பார்.

தொடர்ந்து விசாரணை
அவர் உண்மையில் பெண் தான் என்று நம்பி பலரும் அவரிடம் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர்கள் அனுப்பும் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங்க் செய்து திரும்ப அவருக்கே அனுப்பிவிட்டு இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இப்படி தான் முகமது அல்டாப் தந்தையிடமும் 7 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து தான் அவர் போலீசில் மாட்டிக்கொண்டது தெரியவந்தது. போலீசார் கைது செய்த அப்துல்லாவிடம் இருந்து ஒரு செல்போன் 2 ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications