கும்மியடிச்சு கதைய முடிச்சிருவாங்க.. குடும்ப பிரச்சனை பற்றி விஜய் ஆண்டனி ட்வீட்! ரசிகர்கள் குழப்பம்
சென்னை: குடும்ப பிரச்சனை ஏற்பட்டால் முடிந்தவரை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது பிரிந்துவிட வேண்டும் என்றும், அடுத்தவர்களை அழைத்தால் கும்மியடித்து கதையை முடித்துவிடுவார்கள் எனவும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி. விஜய் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
விஜய் ஆண்டனி முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான நான் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக சலீம், பிச்சைக்காரன் என இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்களும் வெற்றிபெற்றன.

ஹீரோ விஜய் ஆண்டனி
இதனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். தொடர்ந்து சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிர் பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி என பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

அணிவகுக்கும் படங்கள்
ஆனால் சில படங்கள் சிக்கல்களால் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருகின்றன. இது அல்லாமல் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என புதிய படங்களில் நடிக்கவும் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி இருக்கிறார். சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள ரத்தம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று நிறைவடைந்ததது.

ரசிகர்கள்
இதனை தொடர்ந்து விரைவில் திரைப்படம் வெளியாகும் என இயக்குநர் அறிவித்தார். இவரது வித்தியாசமான கதை தேர்வை விரும்பியே பலர் விஜய் ஆண்டனியின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

ட்விட்டர் பதிவு
அதில், "உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க." என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனிக்கு என்ன பிரச்சனை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications