ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே இன்று 1 மணி நேரம் பேச்சுவார்த்தை.. விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை டிச.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்தார்.

மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நடந்து வருகிறது. நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த வாரம் இருவரும் 10 நிமிடங்கள் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமரச தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி ஆகிய இருவரும் இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஆஜரான நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி ஆர்த்தியிடம் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விசாரணையை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications