மாறும் அரசியல் களம்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன்.. டிச.,24ல் டெல்லியில் பங்கேற்பு
சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வருகிறார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் பங்கேற்க உள்ளார். இதனால் தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறுகிறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் சரிவை காண தொடங்கிய காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்ததது. சற்று ஆறுதலாக நடந்து முடிந்த இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்துள்ளது.
இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விலகி வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். மேலும் அக்கட்சியின் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தற்போது செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை
இதற்காக ராகுல் காந்தி யாத்திரை செல்ல முடிவு செய்தார். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி துவக்கினார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை கடந்து ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

உற்சாகத்தில் காங்கிரஸ் கட்சியினர்
இந்த யாத்திரை 100வது நாளை கடந்து ராஜஸ்தானில் தற்போது நடந்து வருகிறது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரைக்கு நடிகர், நடிகைகள், சமூக சேவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் என அவர்கள் நம்புகின்றனர்.

கமல்ஹாசன் பங்கேற்பு
இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் கமல்ஹாசனுடன் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதுபற்றி அந்த கட்சியின் துணை தலைவர் மவுரியா இன்று கூறுகையில், ‛‛பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலந்து கொள்கிறார். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தான் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளோம். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தியே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பங்கேற்க உள்ளோம்'' என்றார்.

மாறுகிறதா அரசியல் களம்?
சென்னையில் இன்று 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாக்ககுழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. கமல்ஹாசன் மக்கள் நீதிய மய்யத்தை துவக்கி தனித்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கமல்ஹாசன் திடீரென்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications