Parthiban: இனி ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன்.. சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!
சென்னை: நடிகர் பார்த்திபன் தன்னை ஒரு நாயுடு பையன் என்று குறிப்பிட்டு பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. முற்போக்குத்தனமாக பேசும் பார்த்திபனிடம் இருந்து இப்படியான ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தனது பேச்சுக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பவன் கல்யாண் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து இருக்கும் பார்த்திபன், படத்தின் புரமோஷன் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியது.

சமயத்திற்கு தகுந்தபடி மாறும் நபராக
அதாவது, பார்த்திபன் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, "என்னுடைய முழுப்பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். சென்னையில் வளர்ந்ததால் இயற்கையாகவே தமிழ் சரளமாக பேச வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் பேச தெரியாது. ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவில் உங்களை சந்திக்கும் போது தெலுங்கு சரளமாக பேசுவேன் என்பதை மூர்த்தி உறுதி அளிக்கிறேன்.
இது என்னுடைய ஒரிஜினல் பெயர்" என்று கூறினார். முற்போக்கும் புரட்சியும் பேசும் பார்த்திபனிடம் இருந்து இப்படியான ஒரு பேச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். பார்த்திபன் சாதிக்கு எதிராக பேசிய வீடியோக்களையும், பகிர்ந்த நெட்டிசன்கள், சமயத்திறகு தகுந்தபடி மாறும் நபராக பார்த்திபன் உள்ளாரா? என்று காட்டமாக கேட்டு இருந்தனர்.
மன்னிப்பு கேட்டு பார்த்திபன் பதிவு
பட நிகழ்ச்சியில் தனது பேச்சு கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தனது கருத்துக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார். பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
சத்தியமாக சொல்கிறேன்
எந்த உள் நோக்கமும் இல்லாமல்
எந்த லாப நோக்கும் இல்லாமல்
வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ
அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
இனி ஒரு முறை கூட..
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது 'இவன்' உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன்.
அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது எனஉறுதியளிக்கிறேன்.
பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்
என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன். நன்றியுடன் ,இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications