“பாடி டபுள்”.. நாட்டையே நம்ப வைத்த கமல்! 23 ஆண்டுக்கு பின் வெளியான ஆளவந்தான் ரகசியம் -நடிச்சது யாரு?
சென்னை: ஆளவந்தான் திரைப்படம் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த படத்தின் பல காட்சிகளில் கமலுக்கு பதில் முக்கிய பிரபலம் ஒருவரே பல்வேறு காட்சிகளில் டூப்பாக நடித்ததாக தெரிவித்து இருக்கிறார். யார் அவர்? விரிவாக பார்ப்போம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். "கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என்ற வசனம் இன்றைய 2கே கிட்ஸுகள் வரை பரிட்சையமானது. இந்த வசனத்தை கொண்ட ஆளவந்தான் திரைப்படம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தையே மாற்றிய ஒன்று என்று கூறப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு, மிரட்டலான காட்சிகள், கதை என அனைத்தும் 20 ஆண்டுகள் கடந்தும் பேசப்பட்டு வருகின்றன.

இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் ராணுவ பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டார் என்று அப்போது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டன. இந்த படத்தை அண்மையில் மறுவெளியீடு செய்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இது திரையரங்குகளில் புதிய படங்களுக்கு இணையாக பட்டையை கிளப்பி ஓடி வருகிறது. இந்த நிலையில் ஆளவந்தான் திரைப்படம் தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் ஆளவந்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் தான் நடித்ததாகவும் அவரே தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ரியாஸ் கானின் மனைவி உமா ரியாஸ், "நீங்கள் சுல்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தீர்கள். ஆனால், நீங்கள் பாடி டபுள் டூப் போட்டீர்கள் என்ற விசயத்தை பரவலாக நிறைய பேர் சொல்வீரக்ள்.

அனால், எந்த அளவுக்கு நீங்கள் டூப் போட்டீர்கள் என்று யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு நீங்கள் டூப் போட்டீர்கள் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும். வெளிப்படையாக பொதுமக்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ, தாணுவாக இருக்கட்டும் ரியாஸ் கான் தான் டூப் போட்டார். இதையெல்லாம் ரியாஸ் கான் தான் செய்தார் என்று யாருக்குமே தெரியாது. நீங்கள் அதற்காக நிறைய மெனக்கெட்டீர்கள், அதற்காக நிறைய கஷ்டப்பட்டீர்கள் என எனக்கு தெரியும்.
இதை நீங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பகிர வேண்டும். ஏனென்றால் இதனை மீண்டும் வெளியிட்டு உள்ளார்கள். இது வெளியே வர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் அதை சொல்லியே ஆக வேண்டும்." என்றார். இதற்கு பதிலளித்த ரியாஸ் கான், "நீங்கள் சொல்வது உண்மைதான். பெரிதாக அது வெளியில் வரவில்லை. பேசப்படவும் இல்லை. நீங்கள் சொல்வதைபோல் சிலர் நீங்கள் தானே டூப் போட்டீர்கள் என்று கேட்பது நான் சொல்லிதான் தெரிந்தது.
யோவ் @ikamalhaasan ஆளவந்தான் படம் முழுக்க டூப் போட்டது ரியாஸ் கான் னு சொல்லாமையே மறச்சுட்டீங்க. பலே ஆளு தான் யா👌BODY DOUBLE வச்சே முழு படம் எடுத்துருக்கானுங்க. pic.twitter.com/JHqpSCEXBa
— RajaGuru (@swatson2022) December 15, 2023
ஒரு தனியார் இதழிலில் 2001 ஆம் ஆண்டு சிறிதாக ஒரு கட்டுரை வெளியானது. இது தவிர வேறு எங்குமே அதுபற்றி பேசவில்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட பயணம் என்று நான் சொல்வது, நடிப்பது மட்டுமின்றி அவருக்கு பாடி டபுள் செய்ததால் முழு படமும் அவரோடு இருந்தேன். எல்லோருமே நடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால் நான் முழு படமும் அவருடன் இருந்தேன். எனவே அவர் எப்படி நடிக்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன்." என்றார்.












Click it and Unblock the Notifications