தற்கொலை செய்தாலே ஆன்லைன் ரம்மி தான் காரணமா? தோனி கோலியை வம்புக்கிழுத்த ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்!
சென்னை : ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களில் நான் மட்டுமா நடிக்கிறேன் ட்ரீம் 11 உள்ளிட்ட சூதாட்ட விளம்பரங்களில், தோனி கோலி போன்றவர்களும் நடிக்கிறார்கள் வேறு காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாலும் ஆன்லைன் ரம்மியால்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தகவல் பரப்பப்படுவதாக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான சரத்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் ரம்மி
கடந்த சில நாட்களுக்கு முன்தினம் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமார்
இந்நிலையில் சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி எனும் கட்சியின் தலைவராக இருப்பதோடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார். பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்திலேயே நடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சமுக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

வேறு காரணத்தால் தற்கொலை
இந்நிலையில் வேறு காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாலும் ஆன்லைன் ரம்மியால்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தகவல் பரப்பப்படுவதாக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான சரத்குமார் ஆவேசமாக பேசியுள்ளார். சென்னையில் அவரது கட்சியில் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டியது அரசு தடை செய்தால் ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது. சூதாட்ட விளம்பரங்களில் நான் மட்டுமே நடிப்பதாக கூறப்படுகிறது. வேறு யாருமே நடிப்பதில்லையா?

கோலி தோனி
ட்ரீம் லெவன் உள்ளிட்ட விளம்பரங்களில் கோலி தோனி போன்றவர்களும் நடிக்கிறார்கள். பிற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டால் கூட ஆன்லைனில் ரம்மி விளையாட்டால்தான் தற்கொலை செய்து கொண்டதாக பரப்பப்படுகிறது. குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என விளம்பரம் செய்யப்படுகிறது. யாரும் குடிக்காமல் இருக்கிறார்களா. நான் கூட யாரையும் குடிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் ஆனால் யாரும் கேட்கவில்லை.

நல்லது கெட்டது!
சிகரெட் பழக்கம் வேண்டாம் என சொல்லுகிறேன் ஆனால் கேட்பதில்லை . ஆனால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தின் நடித்தால் மட்டும் மற்றவர்கள் கேட்பதாக கூறுவது எப்படி. ஆபாச படங்களை தடை செய்து விட்டார்களா. அதனால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள். ஆனால் அதை தடை செய்யவில்லை. உலகத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விட வேண்டும். அவ்வாறு செய்ய கட்டுப்போடு இருந்தால் அவர்களாகவே நிறுவனங்களை மூடி விட்டு சென்று விடுவார்கள்" என கூறினார்
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications