அரசியலில் யாருக்கும் விசுவாசியாக இருக்கமாட்டேன்! நான் ஏன் டெலிக்கு குடுகுடுன்னு ஓடணும்?-எஸ்.வி.சேகர்
சென்னை: அரசியலில் யாருக்கும் தாம் விசுவாசியாக இருக்கமாட்டேன் என்றும் ஆனால் நேர்மையாக இருப்பேன் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு விசுவாசியாக இருந்தால் அவர் சொல்வதை கேட்டு மற்றொருவரை தாக்க வேண்டும் என்றும் இது போன்றவை தனக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறோம் என்றால் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

தன்னை அழைக்காத இடத்தை தாம் திரும்பிக் கூட பார்க்கமாட்டேன் என்றும் அண்ணாமலை பற்றி உளவுத்துறை உள்ளிட்ட பல அமைப்புகள் மூலம் பாஜக மேலிடத்திற்கு தகவல் செல்லாமலா இருக்கும் என வினவிய அவர் பிறகு ஏன் நான் டெல்லிக்கு குடுகுடுன்னு ஓடி அவரை பற்றி சொல்லணும் எனத் தெரிவித்தார்.
மாதத்திற்கு 4 நாடகங்கள் நடத்துவதன் மூலம் 4,000 பேரை நேரடியாக தாம் பார்ப்பதாகவும் அவர்கள் தான் காசு கொடுத்து வருகிறார்களே தவிர மற்றவர்களை போல் காசு கொடுத்து பிரியாணி வாங்கிக் கொடுத்து ஆட்களை அழைத்து வருவது கிடையாது எனவும் அண்ணாமலையை தாக்கினார் எஸ்.வி.சேகர்.
மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராவது உறுதி என்று கூறிய எஸ்.வி.சேகர், ஆனால் அதில் தமிழக பாஜகவின் பங்கு குறிப்பாக அண்ணாமலையின் பங்கு என்பது 1% கூட இருக்காது என மிக ஆணித்தரமாக கூறியுள்ளார். மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனின் 88வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்த வந்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications