சித்ரா கன்னத்தில் "நகக்கீறல்".. ஹேமந்த் உட்பட சக நடிகர்களிடம் விசாரணையை துவக்கிய போலீஸ்!
சென்னை: "நீ இப்படி பண்ணியிருக்கக் கூடாது... எதுக்குடி.. வார்த்தைகளே இல்லை போடி.." என்று தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் சக நடிகை ஹேமா தெரிவித்துள்ளார்.. "எங்க சித்து நெருப்பு" என்று பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இந்த தற்கொலை தொடர்பாக அந்த சீரியலில் நடித்து வந்த முக்கிய நடிகர் மற்றும் நடிகைகள், இயக்குனரிடம் விசாரணையை முடுக்கி உள்ளனர் போலீசார்.

இன்று விடிகாலை ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் நடிகை சித்ரா.. தான் திருமணம் செய்ய போகும் ஹேமந்த் ரவி என்பவரும் அதே ரூமில் சித்ராவுடன் தங்கி இருந்துள்ளார்.
அவர்தான் சித்ரா தற்கொலை குறித்து போலீசுக்கு தகவல் சொல்லவும், சித்ராவின் உடலை அவர்கள் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த ரிப்போர்ட் முடிவுக்காகத்தான் காத்துள்ளனர்.

கல்யாணம்
இதனிடையே சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக யூகத்தின் அடிப்படையில் வெளியாகி கொண்டிருக்கிறது.. சித்ராவுக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி ரிஜிஸ்தர் கல்யாணம் நடந்துள்ளது.. இதை ஹேமந்த்தான் விசாரணையில் கூறினார்.

ஓட்டல் ரூம்
மேலும் திருவான்மியூரில் உள்ள சித்ராவின் அம்மாவுக்கும் ஹேமந்துக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளதும், அதனாலேயே டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் சித்ராவும் ஹேமந்தும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள்.. செம்பரம்பாக்கத்தில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் தான் பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் நடந்து வருகிறது.

காயங்கள்
அதனால், அதே பகுதியில் பெங்களூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் ரூம் நம்பர் 113-ல் தான் சித்ரா தங்கியிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட சித்ராவின் தாடையில் காயங்கள் இருக்கிறதாம்.. அந்த காயம் எதனால் ஏற்பட்டது? ஒருவேளை தம்பதிக்குள் தகராறு நடந்திருக்குமா? அல்லது தூக்கு மாட்டிக்கொண்ட போது புடவையால் ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நகக்கீறல்
ஆனால், முகத்தில் நகக்கீறல் உள்ளதாம்.. அதுதான் எப்படி என்று தெரியவில்லை.. அதனால், ஹேமந்திடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் சில தகவல்களை போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. அப்போதுதான், கடந்த சில நாட்களாகவே சித்ரா மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார். ஹேமந்த் தவிர, ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப்பிறகே இது கொலையா? தற்கொலையா என்று தெரியவரும்.

விசாரணை
இதனிடையே, சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகள், டைரக்டர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.. டைரக்டர் சிவ சேகர், சக நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன், வெங்கட், ரங்கநாதன் ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. முன்னதாக இவர்கள் அனைவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவுக்காக அதிர்ச்சி பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.

கண்ணீர் அஞ்சலி
"நீ இப்படி பண்ணியிருக்கக் கூடாது... எதுக்குடி.. வார்த்தைகளே இல்லை போடி.." என்று தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் சக நடிகை ஹேமா தெரிவித்துள்ளார்.. அதேபோல, நடிகர் ஸ்டாலின் (மூர்த்தி), "எதிர்பார்க்காத அதிர்ச்சி தரும் செய்தி... மிகத்திறமையான ஒரு நடிகை இப்போது நம்முடன் இல்லை.. மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார்.